சென்னை, பிப். 22- தென்னிந் திய நடிகர் சங்க தலைவர் நாசர் நேற்று (21.2.2024) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை யான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென் னையை ஒட்டி பூந்தமல்லி யில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர் ஷன் போன்ற நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங் கள், புரொடக்சன் பணி கள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத் திடலில் இயற்கை வனப் புடன் கூடிய சமூக கட்ட மைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங் கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ் திரை யுலகை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் குறிப் பாக பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங் குள்ள நடிகர்கள் குறிப்பாக திரை யுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன.
இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும்.
தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட் டெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
Thursday, February 22, 2024
முதலமைச்சருக்கு நடிகர் சங்கம் பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment