உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியது தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கியது தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

featured image

சென்னை பிப்.18- உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடை பெற்று வருகிறது என்று இது தொடர்பான பொது நல வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலக தமிழ் ஆராய்ச்சி அறக் கட்டளைத் தலைவரான வழக் குரைஞர் சி.கனகராஜ் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்மொழி வளர்ச்சி

சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமின்றி கீழமை நீதிமன்றங் களின் தீர்ப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண் டும்.
தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க வேண் டும். தமிழ்நாட்டில் கலை, கலா சாரம் மற்றும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழ் மொழியின் மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த தமிழ் அறி ஞர்கள் அடங்கிய சிறப்பு நிரந்தரக் குழுவை அமைக்க வேண்டும்.
ஏற்கெனவே ஆந்திராவில் தெலுங்கு மொழிக்கும், கருநாட காவில் கன்னடத்துக்கும், இந்தி யாவில் வட மாநிலங்களில் ஹிந்தி மொழிக்கும் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு இருப்பது போல தமிழ் மொழியின் வளர்ச் சிக்கும் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்.
தமிழ் மொழியின் மாண்புகள் மற்றும் சிறப்புகளை காக்க தமிழ் நாட்டைஆண்ட மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களின் உருவப்படங்கள் உள்ளிட்ட ஆவ ணங்களை முதல் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்தும்வகையில் முறையாக பாதுகாத்து, பரா மரிக்க உத்தரவிட வேண்டும்.

ஊக்கத்தொகை

தமிழ்மொழியின் மேம்பாட் டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் மூத்த தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் கவிஞர் கள், தமிழ் புத்தக வெளியீட்டா ளர்கள்.
திரைப்பட நடிகர்கள், இயக் குநர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் கூடிய மானியம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் நபர்களை ஒருங் கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வர திட்டம் வகுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது மனுதாரர் ஆஜராகி வாதிட்டார்.

ஆராய்ச்சிக்கு நிதி

தமிழ்நாடு அரசு தரப்பில், மாநில அரசு பிளீடர் ஏ.எட்வின் பிரபாகர் ஆஜராகி, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், “தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல கோடி நிதி ஒதுக்கி எண் ணற்ற பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அனைத்து அரசாணைகள், சுற்றறிக்கைகளில் தமிழ் எண் கள், தமிழ் ஆண்டுகள் தமிழ் மாதங்கள், தமிழ் நாட்களை பயன்படுத்தவேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட் டுள்ளது.
தமிழ் மொழியின் ஆராய்ச் சிக்காகவும். மொழி பெயர்ப்புக் காகவும் மதுரையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங் கப்பட்டு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப் பாக செயல்பட்டு வருகிறது பள்ளி, கல்லூரிகளில் பெரும் பாலான பாடங்கள் தமிழ் மொழியிலேயே நடத்தப்படு கின்றன.
கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று கூறப்பட் டிருந்தது.

அரசுக்கு பாராட்டு

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு பாராட்டு தெரிவித் தனர்.
பின்னர், ‘உச்ச நீதிமன்ற உத் தரவுப்படி சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் ஏற் கெனவே நடைபெற்று வருகிறது.
விரைவில் கீழமை நீதிமன்ற தீர்ப்புகளும் முழுமையாக தமிழில் பிறப்பிக்கப்படும் இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று தீர்ப்பு அளித்தனர்.

No comments:

Post a Comment