கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற கிரக ஜோதி திட்டம், சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) ரூ.500க்கு என்ற மகாலட்சுமி திட்டம் ஆகிய திட்டங்களை தெலுங்கானாவில் தொடங்கினார் முதலமைச்சர் ரேவந்த். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்சநீதிமன்றம் தேர்தல்பத்திர திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு கூட, 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை மோடி அரசு அச்சிட்டுள்ளது.
* ராகுல் காந்தி தலைமையில் இந்தியா நீதிப் பயணம் மார்ச் 7 ஆம் தேதி குஜராத்தில் தஹோத் மாவட்டத்தில் உள்ள ஜலோட் என்ற இடத்தில் நுழைய முடிவு.
* பாரம்பரிய அறிவு மற்றும் ஆயுஷ் பயிற்சியாளர் களுக்கான நியாயமான மற்றும் சமமான பலன் பகிர்வு வசதியை மோடி அரசு நீக்கிவிட்டதாகவும், பதஞ்சலி போன்ற நிறுவனங்களுக்கு வணிகங்களை திறந்து விட்டு, உள்ளூர் வணிகர்களின் வாய்ப்பை தடுத்து விட்டதாகவும், காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* அய்ந்து முதல் ஆறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிஆர்பிஎஃப் மற்றும் அரியானா காவல்துறையினரின் கான்வாய் மூலம் கடத்தப்பட்டதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றச்சாட்டு.
* நாட்டில் 5 சதவீதம் அதாவது 7 கோடி மக்கள் தான் ஏழைகள் என்று மோடி அரசு கூறுகிறது. அப்படியெனில், 81 கோடி பேருக்கு ஏன் இலவச ரேஷன் தேவை என காங்கிரஸ் கேள்வி. மோடி அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது என சாடல்.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment