விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - சோதனை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - சோதனை வெற்றி

featured image

பெங்களூரு, பிப்.22- இந்தியா விண்வெளி துறையில் பல அரிய சாதனைகளை படைத் துள்ளது. நிலவுக்கு சந்தி ரயான் விண்கலம், சூரிய னுக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் ஆகியவற்றை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதேபோன்று, விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டமும் செயல்பாட் டில் உள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப் பாதைக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப் பாக பூமிக்கு திரும்ப கொண்டு வருவது ஆகும். நடப்பு ஆண்டில் இலக்கை அடைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த திட்டம் வெற்றி யடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து, மனிதர்களை விண் வெளிக்கு கொண்டு செல் லும் உலகின் 4ஆவது நாடாக இந்தியா உருவெ டுக்கும்.

இந்த நிலையில், விண் வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரை யோஜெனிக் இயந்திர பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதனால், ககன்யான் திட்டத்தில் பெரிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம்.
இதுபற்றி இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக வலை தள பதிவில், இஸ்ரோ வின் சி.இ.20 கிரையோ ஜெனிக் இயந்திரம் தற் போது, ககன்யான் திட் டங்களுக்காக விண் வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்ல கூடிய திறன் பெற்றுள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கடுமையான பரிசோ தனைகள் இயந்திரத்தின் உறுதி தன்மையை நிரூ பித்து உள்ளது. முதல் ஆளில்லா விமானம் எல்.வி.எம்.3 ஜி1-க்காக அடையாளம் காணப் பட்ட சி.இ.20 இயந்திரம், ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை கடந்து வந்துள்ளது.
அதிக உயரத்தில் பரி சோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந் திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளா கத்தில் கடந்த 13ஆம் தேதி, இறுதி பரிசோ தனை நடந்தது.

7ஆவது முறையாக நடந்த இந்த தொடர் பரிசோதனையின்படி, வெற்றிடத்தில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில், இயந்திரம் ஆனது வெப்பப்படுத்தி பார்க்கப்பட்டது.
அது பறக்கும் நிலையை தூண்டுவதற் கானது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, சி.இ.20 இயந்திரம் மனி தர்களை சுமந்து செல் வதற்கான தரைப்பகுதி தகுதி பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
அதில், உயிர் வாழ் வதற்கான விளக்க பரி சோதனைகளும் நடந் தன.
நீடித்து உழைக்க கூடிய பரிசோதனைகள் மற்றும் செயல்பாட்டு திறன் பரிசோதனை, குறைந்த அளவிலான இயக்கத்தின் கீழ் அதன் செயல்பாடு என அனைத்து தரைவழி பரிசோதனைகளும் நிறைவடைந்து.
அதில் வெற்றியும் கிடைத்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment