புதுடில்லி, பிப். 2- நாடாளு மன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்க ளுக்கு அரசியல் கட்சிகளு டன் தொடர்பு வைத்தி ருந்ததாக ஒப்புக்கொள்ளு மாறு காவல்துறையினர் துன்புறுத்தியதாக கைதான இளைஞர்கள் கண்ணீர் மல்க நீதிபதிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்
2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையா ளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டு களை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக் கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் இவர் களை துன்புறுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித் துள்ளனர்.
டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், காவல்துறையினர் தங்களை கொடுமைப் படுத்தினர், வெற்றுத் தாளில் கையெழுத்திட நிர்பந்தித்தனர் என்று பரபரப்பு புகார் அளித்து உள்ளனர்.
மேலும், “சமூக வலை தள கணக்குகள், இமெ யில், அலைபேசிகளின் பாஸ்வேர்டு ஆகிய வற்றை அளிக்குமாறு நிர்பந்தித்ததாகவும், பாலிகிராஃப் சோதனை செய்யும் போது அரசியல் கட்சிகளின் பெயரை தெரிவிக்குமாறும் மிரட் டப்பட்டோம்” என்று தெரிவிதித்துள்ளனர். “உடலில் மின்சாரம் பாய்ச்சி அரசியல் தலை வர்களை சிக்க வைக்க எங் களை கொடுமைப் படுத் தினர்” என்று இவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து 6 பேரின் புகார் மனு தொடர் பாக பதில் அளிக்க டில்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை பிப்.17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment