தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முன்னெடுப்பில் நடக்கும் “கணித்தமிழ் 24 மாநாடு” தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், வருங்காலத் திட்டமிடலுக்கும் மிக முக்கியமான முன்னெடுப்பாகும். பல்வேறு துறைகளிலும் தமிழ் வளர்ச்சிக்காக சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசு ஆற்றி வரும் பணிகளில் இது போற்றத்தக்க ஒன்றாகும். பல நூறு மாணவர்களும், இளைஞர்களும் இம் மாநாட்டில் பங்கேற்றிருப்பது பெரிதும் நம்பிக்கையளிக்கக் கூடியதாகும்
1999 இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு இந்தப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது போல், இப்போது நடைபெறும் மாநாடும் முக்கியமானதாகும்.
காலத்திற்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கும் இந்த முன்னெடுப்புடன், ஊடுருவல்களிலிருந்து தமிழைக் காக்கும் கவனமும் அவசியமாகும். கணித் தமிழ் மாநாட்டில் பங்கேற்று ஒருங்குறி குறித்து உரை யாற்றும் சிறீரமண சர்மா என்பவர் காஞ்சி சங்கர மடத்தின் கையாளாகச் செயல்பட்டு, தமிழ் ஒருங் குறிக்கான ஒதுக்கீட்டுக்குள் சமஸ்கிருத ஒலிகளுக் கான எழுத்துகளைக் கொண்டுவர முயற்சித்த வராவார்.
2010 ஆம் ஆண்டு இந்தச் சதியை முறியடித்துத் தமிழைக் காக்க, திராவிடர் கழகத் தலைவர் மேற் கொண்ட முயற்சியும், போர்க்கால அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்த நடவடிக்கையும்தான் ஊடுருவலைத் தடுத்தது.
இத்தகைய நபர்களைத் தமிழ் ஒருங்குறிக்கான உயர்மட்டக் குழுக்களிலும், மாநாடுகளிலும் இடம் பெற அனுமதிப்பதன்மூலம் எதிரிகளை கூடாரத் துக்குள் அனுமதிக்கும் செயலாக அமைந்து விடக் கூடாது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment