திராவிடர் கழகத் தோழர்கள் எந்த பணியை மேற்கொண்டாலும் அதில் வல்லமை பெறக்கூடியவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

திராவிடர் கழகத் தோழர்கள் எந்த பணியை மேற்கொண்டாலும் அதில் வல்லமை பெறக்கூடியவர்கள்!

featured image

கடைத் திறப்பு விழாவில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுரை

உரத்தநாடு, பிப்.17 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், நெய்வாசலில் ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணனின் பாலா டிரே டர்ஸ் டைல்ஸ் & பெயிண்ட்ஸ் என்ற புதிய காட்சிக் கூடத்தைத் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை காவல்துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு) மா.தவமணி, உரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், தி.மு.க. மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் பொ.வீரையன், நெய்வாசல் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராகாந்தி தேசிகாமணி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகத் தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.ஜெகநாதன், ஒக்க நாடு மேலையூர் ஒன்றிய குழு உறுப்பினர் ம.துரைராசு ஆகியோர் முன் னிலை வகித்தனர். அனைவரையும் கடையின் உரிமை யாளர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் வரவேற்று உரை யாற்றினார்.தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க இளை ஞரணி செயலாளர் இரா.மகேஸ்வரன் நன்றி கூறினார்.

கழகப் பொதுச்செயலாளர் உரை
நிறைவாக உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:
இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடை கிறேன். தோழர் பாலகிருஷ்ணன் எங்கள் பகுதிக்கு வரும்போது, எனது நிறுவனமான பாலா டிரேடர்ஸ் டைல்ஸ் மற்றும் பெயிண்ட்ஸ் காட்சிக் கூடத்தை திறப்பதற்கு தேதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உங்களுக்கு ஏற்ற தேதியை கொடுத்து உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்தது. உடனே அவருக்குத் தேதியை வழங்கினேன். இதேபோன்று கடை முன்பகுதியில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள் ளது. அதற்கு ஏற்ப தோழர் பாலகிருஷ்ணன் செயல் படுவதனால் இவ்வளவு பெரிய நிறுவனமாக உயர்ந் துள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள ஏராளமான தோழர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உற வினர்களைப் பார்க்கும்போது இவரின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.
அதே போன்று கல்லூரியில் படிக்கும் காலங்களில் புதுக்கோட்டை, திருச்சி, தேனி பகுதிகளில் நமது கழகத் தோழர்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஒக்கநாடு மேலையூரில் உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பவளவிழா வளைவு கட்டுவதற்காக சிங்கப்பூரிலிருந்து அதிக அளவில் நன்கொடை பெற்று தந்துள்ளார். கிராமப்புறங்களில் தொழில் செய்வது அவ்வளவு எளிதான காரியம் – அல்ல. பாலா கன்ஸ்ட்ரக்சன் தொடங்கி 10 ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து பணி செய் வது கடினமான காரியம் ஏனென்றால், ஒரு நிறுவனம் நடத்துவது என்பது அவ்வளவு சிரமமான காரியம். ஆனால், இந்த நிறுவனத்தை சிறப்புடன் நடத்தி வருகிறார். எவ்வளவு பணி சுமையிலும், தொடர்ச்சியாக இயக்கப் பணி ஆற்றி வருகிறார். காரணம் திராவிடர் கழகத் தோழர்கள் எவ்வளவு பெரிய கடினத்தையும் எதிர்கொள்ள கூடியவர்கள். பாலகிருஷ்ணன் சிறப்பாக செயல்படுவதற்கு அவரின் வாழ்விணையர் ரோசி, அம்மா, சகோதரர் போன்றோர் உறுதுணையாக உள் ளார்கள். சொந்த ஊரில் நண்பர்களுடன் சேர்ந்து விவ சாயிகள் பயன்பெறும் வகையில் கதிர் அறுக்கும் இயந் திரத்தையும் செயல்படுத்தி வருகிறார். கூட்டு முயற்சி என்ற நிலையில் செயல்படும் தோழர் பாலகிருஷ்ணன் நடத்தும் நிறுவனம் நல்ல நிலைக்கு வர வேண்டும். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.

பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சியில், உரத்தநாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன், உரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்திகேயன், மாநில கழகக் கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித் தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், பெரியார் சமூக காப்பணி அமைப்பாளர் தே. பொய்யா மொழி, கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன், மாவட்ட கழக கலை இலக்கிய அணித் தலைவர் வெ.நாராயண சாமி, உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அ.சுப்ர மணியம், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட கழக வழக்குரை ஞரணி செயலாளர் க.மாரி முத்து, மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ரெ.சுப்ர மணியன், மாவட்ட கழக தொழிலாளர் அணித் தலைவர் இரா. சந்துரு, மாவட்ட கழக தொழிலாளரணி அமைப்பாளர் போட்டோ மூர்த்தி, தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை.கு.நேரு, தெற்கு ஒன்றிய விவசாய அணித் தலைவர்
மா.மதியழகன், செயலாளர் க. அறிவரசு, வடக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி தலைவர் மன்றோ. மதியழகன்,தெற்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர் துரை. தன்மானம், வடக்கு ஒன்றிய கழக இளை ஞரணி தலைவர் நா அன்பரசு, தெற்கு ஒன்றிய இளை ஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், நீடாமங்கலம் மேனாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்து.ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒக்க நாடு கீழையூர் ந.சுரேஷ்குமார், வன்னிப்பட்டு சு.தின கரன், கக்கரை தமிழ்மணி, ஒக்கநாடு மேலையூர் சித்ரா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் அரசப்பட்டு கிருஷ்ணமூர்த்தி, ஒக்கநாடு கீழையூர் கலைச் செல்வி பாரத், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒக்கநாடு மேலையூர் அ.சண்முகம், மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் வடுவூர் தென்பாதி கரிகாலன், லிட்டில் ரோஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வீ.அகிலன், மாநில வாடகை பாத்திர, பந்தல் அமைப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் சு.திங்கள்கண்ணன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ம.மணி, தொழிலதிபர்கள் ஒக்கநாடு கீழையூர் கே.கே.சாமி ரைஸ்மில் தர்மராஜ், கருவாக்குறிச்சி சந்திரசேகரன், உரத்தநாடு மருது ஜுவல்லரி மு. மந்திரிகுமார், ஒக்கநாடு மேலையூர் அபி அக்ரோ சென்டர் ச.நாகராஜன், அருவி டிரேடர்ஸ் தென்னவை வே.கதிர்வேல், தஞ்சை அமிர்தா புத்தக நிலையம் மா.திராவிடச் செல்வம், ஒக்கநாடு மேலையூர் சுகன்யா மெடிக்கல்ஸ் சவு.பிரபு, கருவாக் குறிச்சி அண்ணாத்துரை, உரத்தநாடு நகர கழக துணைத் தலைவர் மு.சக்திவேல், திராவிடர் கழகத் தோழர்கள் கக்கரை கோ.ராமமூர்த்தி, மகளிரணி தோழர் கலைச் செல்வி அமர்சிங், தஞ்சை அமர்நாத், நெடுவை
கு.லெனின், வடுவூர் ஆசை ஒளி, நமச்சிவாயம், வன் னிப்பட்டு மு. செந்தில்குமார், ஒக்கநாடு மேலையூர் ஆ.இராமகிருஷ்ணன், கிளை கழகத் தலைவர்
அ.ராசப்பா, கிளைகழக செயலாளர் நா.வீரத்தமிழன், மா.தென்னகம், க.மாணிக்கவாசகம், ச.பெரியார்மணி, ம.ரகு, ச.அருனேஷ், பெரியார் நகர் சு.ராமதாசு, வெ.சக்தி வேல், புதுவளவு மெய்யழகன் உள்ளிட்ட கழகத் தோழர் களும், பொதுமக்களும் விழாவில் பங்கேற்று சிறப்பித் தனர்.

No comments:

Post a Comment