அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு

மாவட்ட ஆட்சியர், அய்.ஜி. உள்பட 17 அதிகாரிகள்
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 2- தூத்துக்குடி துப் பாக்கிச் சூடு நிகழ்வில் தொடர் புடைய காவல்துறை துணைத் தலை வர், மேனாள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 17 காவல் துறை அதிகாரி கள் பதில் மனு தாக்கல் செய்யும்படி அவர்களுக்கு தாக்கீது அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக தேசிய உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக் காக எடுத்து விசாரணை நடத்தியது.
பின்னர் இந்த வழக்கை தேசிய ஆணையமே முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை.ஆர் வலரும், வழக்குரை ஞருமான ஹென்றி திபேன் என் பவர், சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் துப்பாக்கிச் சூட் டுக்குக் காரணமான சம்பந்தப் பட்ட அதிகாரிகளையும் எதிர் மனுதாரர்களாக இணைத்து மனு தாக்கல் செய்ய மனுதார ருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந் தனர்.
அதன்படி, துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணைய அறிக்கையில் சுட்டிக்காட் டியபடி, துப்பாக் கிச் சூடு நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட மேனாள் தென்மண்டல காவல்துறைத் தலை வர், காவல்துறை துணைத் தலைவர் தூத்துக்குடி மாவட்ட மேனாள் ஆட்சியர் உள்ளிட்ட 17 பேரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து ஹென்றி திபேன் கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் 31.1.2024 அன்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது அட்வகேட் ஜென ரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி 17 அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதிட் டார்.

இதை நீதிபதிகள் ஏற்க வில்லை. எங்களது உத்தரவின் படிதான் 17 அதிகாரிகளையும் மனுதாரர் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார் என்று விளக்கம் அளித்தனர்.
மனுதாரர் ஹென்றி திபேன், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் ஏற் கெனவே ஸ்டெர்லைட் சார்பில் ஆஜராகாதவர்களாக இருந்தால் நல்லதாக இருக்கும் என்று அட்வ கேட் ஜெனரலை மறைமுகமாக குறிப்பிட்டு வாதிட்டார்.இதை யடுத்து நீதிபதிகள்,
இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட17 அதிகாரிகளும் பதில் அளிக்க வேண்டும் என்று தாக் கீது அனுப்ப உத்தரவிடுகிறோம். விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

No comments:

Post a Comment