புதுடில்லி, பிப். 3- நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை அன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங் கியது.
அதனை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக் கையை தாக்கல் நிகழ்வுக்கு அடுத்ததாக வழக்கமான நிகழ் வுகளுக்காக நாடாளுமன்ற கூட் டத்தொடர் நடைபெற்று வரு கிறது. இதில் நேற்றைய நாடா ளுமன்ற கூட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய் யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்க்கள் அமளி யில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதில் மாநில ஆளுநர்களின் அதிகாரம் குறித்து ஏற்கெனவே உள்ள சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளார். அரசியல் சட்ட பிரிவு 157-இன் படி ஒரு ஆளுநராக நியமிக்கப் பட்டவர், மாநில முதலமைச்சர் மற்றும் மாநில மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவி நியமானம் செய்து வைப்பது மட்டுமே. ஆனால், குடியரசுத் தலைவரை யும், மாநில ஆளுநரையும் ஒரே அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுத்துவது முறை யல்ல என்றும், குடியரசுத் தலை வர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படு கிறார். ஆனால், ஆளுநர் பதவி என்பது வெறும் நியமன பதவி மட்டுமே.
அதனை குடியரசுத் தலைவருக்கு நிகராக நடத்தக் கூடாது. ஒரு மாநில முதல மைச்சர் தவறு செய்தால் அவர் மீது வழக்கு தொடர நீதித் துறைக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அதுவே ஒரு ஆளுநர் தவறு செய்தால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியநிலை உள்ளது. அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் அதி காரம் படைத்தவரா என்று கேள்வி எழுகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல மைச்சரை விட ஆளுநரை கூடு தல் அதிகாரம் அளிப்பது விரும்பத்தகாதது. பொது அமைதியை சீர்குலைக்க பொது நலனுக்கு எதிராக ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக் கையை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். சட்டப்பிரிவு 361-இன் படி ஆளுநர் மீது நடவ டிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு இருக்கும் தடையை விடுவிக்க வேண்டும் என்று தனி நபர் மசோதாவில் திமுக மாநிலங்க ளவை நாடாளுமன்ற உறுப் பினர் வில்சன் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment