பாட்னா,பிப்.17- ‘ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் உறுதிப்படுத்தப் படும்’ என்று காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அரசு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக் கான பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் சூழலில், இந்த வாக்கு றுதியை ராகுல் அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்திய ஒற் றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ரோடஸ் மாவட்டத்தில் நேற்று (16.2.2024) நடைபெற்ற ‘விவசாயிகள் நீதி பஞ்சாயத்து’ என்ற விவசாயிகளின் கூட்டத்தில் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
“விவசாயிகளுக்கு விளை பொருள் களுக்கான உரிய விலை கிடைப்ப தில்லை. இந்தச் சூழலில், 2024 மக் களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தி யில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் உறுதிப்படுத்தப் படும். விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு எப்போதும் நிறைவேற்றி வந்துள்ளது.
பயிர்க் கடன் தள்ளுபடி, விளை பொருள்கள் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ண யம் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி விவசாயிகளின் நலனை காங்கிரஸ் எப்போதும் பாதுகாத்து வந்துள்ளது. வரும் காலங்களிலும் விவசாயிகளின் நலன் பாதுகாக் கப்படும்” என்றார்.
பெரு நிறுவனங்களுக்குச் செல் லும் பாதுகாப்பு நிதி: அதனைத் தொடர்ந்து கைமூர் மாவட்டம் மொஹானியா பகுதியில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய ராகுல், பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பணி அடிப்படையில் வீரர் களைத் தேர்வு செய்யும் ‘அக்னிவீர்’ திட்டம் குறித்து விமர்சனம் செய்தார்.
அவர் மேலும் பேசியதாவது;
ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியில், குறிப்பிடத்தக்க பங்கு தனியார் பெரு நிறுவனங் களுக்குச் செல்கிறது. பாதுகாப்புத் துறைக்கான நிதி நிலை அறிக்கை, ராணுவ வீரர்களின் நலனுக்காக அல்ல என்ற வகையில் மாற்றப்பட் டுள்ளது. அதாவது, பாதுகாப்புத் துறைக்கான நிதி நிலை அறிக்கை, ராணுவ வீரர்களின் ஊதியம், ஓய்வூதிய செலவுகளுக்கு அல்லாமல், பெரு நிறுவனங்கள் பலனடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மோடி அரசு ‘அக்னி வீர்’ திட்டத்தை அறிமுகம் செய்துள் ளது. இத் திட்டம் வீரர்களிடையே அக்னி வீரர்கள், முழு நேர வீரர்கள் என்ற பாகுபாட்டை உருவாகி யுள்ளது. பாதுகாப்புப் பணியின் போது காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காது. ஓய்வூ தியமும் கிடையாது. ராணுவ வீரர் களுக்கான மலிவு விலை அங்காடி களையும் (ராணுவ கேன்டீன்) இவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்று குற்றஞ்சாட்டினார். மொஹானியா பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘அக்னிவீர்’ திட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட் டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சசரம் பகுதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ராகுல் தொடங்கிய போது, மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி ராகுல் காந்தியை வர வேற்று, அவருடன் ஒரே வாகனத்தில் செல்கையில், அவரே வாகனத்தை ஓட்டிச்சென்றார் என்ப தும் குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment