போலி வீடியோக்களைப் பரப்பும் சமூக விரோதிகள்
சென்னை, பிப்.22 கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அதிலும் பா.ஜ.க. ஆதரவு தளங்களில் இதுபோன்ற செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டன.
இந்த வதந்திகள் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத் தில் தமிழ்நாடு அரசு உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தியதுடன், வதந்தி பரப்பிய சமூக வலைத்தளங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அது போன்ற வதந்தி பரப்பட்டுள்ளது.
அச்சத்தை உருவாக்கவே பொய்யான காட்சிப் பதிவுகள்
தமிழ்நாடு அரசு சார்பில் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு:
19-_02_2024 அன்று தனியார் தொலைக்காட்சி சமூக வலைதளப் பக்கத்தில் ஹிந்தியில் ட்வீட் செய்து, 48 நொடிகள் கொண்ட காட்சிப் பதிவு வெளியிடப்பட்டது. இந்த காட்சிப் பதிவில் சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இரண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குற்றவாளிகளால் தூக்கி வெளியே எறியப்பட்டதாகவும், இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்தார் என்றும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஒரு செய்தியை அவர்களது முகநூல் பக்கத்திலும் மற்றும் யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், மேற்படி காட்சிப் பதிவில் இறந்த நபரின் உடல் அடங்கிய சவப் பெட்டி அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத் திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய செய்தி முற்றிலும் தவறானது ஆகும், இது போன்ற காட்சிப் பதிவுகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்பதற்கும், ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்படுகின்றன.
மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் சென்னை பெருநகர காவல் எல்லையில் நடக்கவில்லை என்பதனை சென்னை பெருநகர காவல் துறை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறது. மேற்குறிப் பிட்ட காட்சிப் பதிவு விவகாரம் தொடர்பான விசாரணையில், கடந்த 06-02-2024 அன்று பீகார் மாநிலம், கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் மஹ்தோ கிராம் துர்காலியா என்பவர் விழுப்புரத்திலிருந்து தாம்பரத்திற்குச் செல்லும் ரயில் எண்.60208இல், நடைமேடை எண். 2 இல் இருந்து ரயிலின் மேலே ஏறிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந் துள்ளார். இந்த விபத்து குறித்து விழுப்புரம் இரயில்வே காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்ட காவல் துறை அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, பீகார் மாநிலம் பாட்னா வரை தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
அஸ்வினி குமார் உபாத்யாய் Vs யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழக்கில் (W.P. (Civil) எண். 943 இன் 2021), உச்சநீதிமன்றம் பிறப்பித்த 13.1.2023 தேதியிட்ட உத்தரவில், “வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மீது தானாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும், எனவே, ச/பி 153, 153கி (1)(ணீ), 505 (1) (தீ) & 505 (2) இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேற்கூறிய தவறான செய்திகளுக்கு எதிராக சென்னை பெருநகர காவல் துறை, மத்திய குற்றப்பிரிவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தீங்கிழைக்கும் அவ தூறு தகவல்கள், காட்சிப் பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட மேற்கொள்ளப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேஜஸ்வி எடுத்த நடவடிக்கை
பீகாரில் தேஜஸ்வி துணை முதல மைச்சராக இருந்த வரை தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகளைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டது, 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பீகாரைச் சேர்ந்த ஒருவர்மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், நிதிஷ்குமார் பாஜ கவோடு இணைந்த ஆட்சி ஏற்பட்ட வுடன் மதுரையிலிருந்து தர்பங்கா (பீகார்) சிறைக்கு கொண்டு செல்லப் பட்ட அந்த நபர் பிணையில் விடுதலை ஆனார். அவர் விடுதலை ஆன பிறகு மீண்டும் போலிச் செய்திகள் முக்கிய செய்திச்சேனல்களிலேயே பரவத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்
தக்கது.
No comments:
Post a Comment