இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர  விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர  விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு

featured image

சிறீஅரிகோட்டா,பிப்.21– அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக் குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந் தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” (யுவ விஞ்ஞானி கார்யக் ரம்) என்ற சிறப்பு திட் டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா வின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிர தேசத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற் புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப் படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத் தில் சேர 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற மார்ச் 20ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர்.
இதனால் இஸ்ரோ வுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடு கள் குறித்த அடிப்படை அறிவை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர் களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில் நுட்பம் மற்றும் விண் வெளி பயன்பாடுகள் பற் றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைக ளின் செயல்முறை விளக் கம், போட்டிகள், ரோபோ டிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரை யாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட் டத்தில் அடங்கும்.
வகுப்பறை விரிவுரை கள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில் நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந் துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

No comments:

Post a Comment