பாட்னா, பிப்.5- பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ் டிரீய ஜனதா தளம் உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவிலிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச் சராகப் பதவியேற்றார். நிதிஷ்குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந் துள்ளதால் அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வருகிற 12-ஆம் தேதி பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தெலங்கானா தலைநகர் அய்தரா பாத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மொத்தம் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தவிர 16 பேர் அய்தராபாத் அழைத்து செல்லப்பட்டு அங் குள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment