
புற்றுநோய்தான் நோய்களிலேயே வரு முன்னரே தடுக்கும் சக்தி கொண்ட, – வல்லமையைக் கொண்ட- நேரிடைப் பலன் தரும் வகையிலுள்ள – எவ்வளவு ஆராய்ச்சிகள் தொடர்ந்த நிலையிலும் – தகுந்த மருந்து ஊசிகள் அல்லது வேறு ஏதோ முறை மூலம் வராமலேயே தடுக்க இயலாத கொடும் நோயாக உள்ளது!
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உலகி லேயே மக்கள் தொகை மிகுந்த நாடான இந்தி யாவில் தான்
1) நுரையீரல் புற்றுநோய்
2) பெருங்குடல் புற்றுநோய்
3) மார்பகப் புற்றுநோய்
4) கணையப் புற்றுநோய்
5) வயிற்றுப் புற்றுநோய்
ஆகிய அய்வகை நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறதாம்!
இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆய்வுப்படி நம் நாட்டில் 9 பேரில் ஒருவர் புற்றுநோயால் தாக்கப்பட்டவராக உள்ளாராம்!
ஆண்களில் 68 பேரில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பகப் புற்று நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்.
நம் நாட்டில் உத்தரப்பிரதேசத்தில் புற்றுநோய் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக் கிறதாம்.
அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாகவும், முந்தைய ஆண்டில் 2 லட்சம் பேருக்கு இந்த நோய், ஏற்பட்டதாகவும், புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இரண்டாவது இடத்தில் மராட்டிய மாநிலமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கம், பீகாரும் உள்ளன.
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் தமிழ்நாடு!
அடிப்படை பாதிப்பு விகிதாச்சாரத்தில் பார்த்தால் இந்த வரிசை மாறுகிறதாம்!
அதன்படி கேரளாதான் முதல் இடத்தில் உள்ளது; ஒரு லட்சத்து 135 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!
ஆரம்ப கட்டத்திலேயே அதனை ஆய்வு மூலம் கண்டறிந்து, உரிய முறையில் உரியவர்களிடம் சென்று உடனடி சிகிச்சையை மேற்கொண்டால், நிச்சயம் குணமாகி, உடல் நலம் தேறிவிட முடியும் என்பதால், புற்றுநோய் அடையாளம் கண்டுள்ள வர்களை மருத்துவர்கள் கண்டறிந்தவுடன் கடைசி எல்லையான இறப்புதான் என்ற அவசர முடிவிற்கு வந்து விடக் கூடாது – பாதிக்கப்பட்டவர்கள்.
‘துவக்கக் கண்டுபிடிப்பு சிகிச்சை மேற் கொண்டால், மீண்டு வருவது சாத்தியம்’ என்ற தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளப் பழக போதிய அறிவுறுத்தல்கள் பலருக்கும் தேவை.
தன்னம்பிக்கைதான் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அருமையான செயலி ஆகும்! பொதுவாக நம்பிக்கைதான் நம் வாழ்வு என்பதை எவரே மறுக்க முடியும்?
எந்த வயதிலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. என்றாலும் முதுமையாளர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
இங்கிலாந்து நாட்டு மன்னர் சார்லஸ் தனது தாயார் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின் தமது 75 வயதில்தான் மன்னராக முடிசூடும் நிலை ஏற்பட்டது!
அவருக்கு புராஸ்டேட் புற்று வந்துள்ளதை அவர் ரகசியமாக வைத்திருக்காமல் பகிரங்கப் படுத்தச் சொன்னபடி, நேற்று (6.2.2024) அச்செய்தி வந் துள்ளது! (விரைவில் குணமாகக் கூடும்).
அரசர் முதல் ஆண்டி வரை எவரையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை.
புகை பிடித்தல், புகையிலைப் பொருள் பயன்படுத்துதல், உடல் பருமன், தொடர்ந்து ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து பணியாற்றுதல், அதிக மதுப் பழக்கம்.
குறிப்பாக பெண்கள் கருவாய்ப் புற்று, மார்பகப் புற்றுநோய் போன்றவற்றில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் உடலை ஆய்வு செய்தால் ஓரளவு புரிந்துகொண்டு, மருத்துவரிடம் சென்று குணப் படுத்திட முடியும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
மற்றொரு முக்கியமானது – புற்றுநோய் தொற்று நோய் – அல்ல என்பதாகும்.
நோயாளிகளைக் கவனிப்போர் – உதவுவோர் பயப்பட வேண்டாம் – விரைவில் புற்று நோயற்ற புது உலகம் காண்போமாக!
உடற்பரிசோதனையை அலட்சியப்படுத்தாமல் அவ்வப்போது செய்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment