சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கவுரை

featured image

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள்!
உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில்,
சிறுபான்மை சமூகத்தை ஒரே அடியாக ஒழித்துவிட்டார்கள்!

சென்னை, பிப்.2 ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள்! உச்சநீதிமன்றத் தைப் பொறுத்தவரையில், சிறுபான்மை சமூகத்தை ஒரே அடியாக ஒழித்துவிட்டார்கள்! என்றார் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்.

“தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!”

கடந்த 27.1.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் “தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதிக்கு வேண்டுகோள்!” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொருவராக சேர்த்து, சேர்த்து…

இப்பொழுது புரிகிறதா? எப்படி நாம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது வெற்றி பெற்றோம்; இப்பொழுது 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை காலகட்டத்தில் நாம் தோற்றுப் போய்விட்டோம்.
எவ்வளவு சூட்சுமமாக 9 பேர் உள்ளே வந்துவிட் டார்கள். ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவராக சேர்த்து, இந்த அளவிற்கு வந்துவிட்டார்கள்.
இந்தத் தகவலை மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்குரைஞர் கூட்டத்திலும் சொன்னேன்.
உச்சநீதிமன்றத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவி னுடைய வரலாற்றிலேயே மூன்று பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஒரே நேரத்தில் அந்தப் பதவியில் இருப்பது இப்பொழுதுதான்.
ஏன்?

மோடிக்கும், அவருடைய அரசுக்கும் பட்டியலினத் தின்மீது உள்ள காதலா? என்றால், இல்லை. உயர்நீதி மன்றத்தில் ஏன் நியமிக்கவில்லை?
ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி. கமிட்டி இருக்கிறது. எதற்கென்றால், இந்தியா முழுவதும் அவர்கள் ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காகத்தான்.

உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், சிறுபான்மை சமூகத்தை ஒரே அடியாக ஒழித்துவிட்டார்கள்!

உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், சிறு பான்மை சமூகத்தை ஒரே அடியாக ஒழித்துவிட்டார்கள்.நான் நீதிபதியாக ஆன அந்தக் காலகட்டத்தில், நான்கு பேர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதி களானார்கள்.அல்டாமஸ் கபீர், அல்டப் ஆலம், இக்பால், கலிஃபுல்லா ஆகிய நான்கு நீதிபதிகள்.

நீதிபதி கலிஃபுல்லா அவர்கள்தான் கடைசியாக ஓய்வு பெற்றார். அதற்கடுத்து நியமிக்கப்பட்டார் நீதிபதி அப்துல் நசீர் – நீண்ட இடைவெளிக்குப் பிறகு. இவர் ஓய்வு பெற்ற பிறகு, கொஞ்ச நாள்கள் இடைவெளி இருந்தது; இப்பொழுது ஒருவரை தேடிக் கண்டுபிடித்து அமானுல்லா என்பவரை நியமித்திருக்கிறார்கள்.

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சொன்ன அய்ந்து நீதிபதிகளில் ஒருவர்

நீதிபதி அப்துல் நசீர் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும் அல்லவா! பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சொன்ன அய்ந்து நீதிபதிகளில் ஒருவர்தான் இவர்.

அதனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தது ஒன்றிய அரசு.
சிறுபான்மையினர் சமூகத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்ன பிரச்சினை இருக்கிறது? தேர்வுக் குழுவில் ஏன் அவர்களை நிய மிக்கவில்லை; பட்டியலினத்தவரை ஏன் நியமிக்க வில்லை என்று நாம் கேள்வியெழுப்புகின்றோம்.

ஆசிரியர் அய்யா அவர்கள் சொல்லியிருக்கின்ற யோசனை மிக நல்ல யோசனையாகும். ஏனென்றால், எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். நான்கு நாள்களுக்கு சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமித்தால், நான்கு நீதிபதிகளுக்குப் பதிலாக, 16 நீதிபதி கள் அந்தக் குழுவில் பங்கேற்பார்கள்.
சர்ச்சைக்குரிய நீதிபதிதான்!

அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்பொழுது, ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பொறுத்தவரையில், எங் களுக்கு ஆட்சேபணை இருக்கிறது என்று சொன்னார். அவர் சொன்னது விவாதத்திற்குரியதுதான். எப்பொழு துமே அவர் ஒரு சர்ச்சைக்குரியவர்தான். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக அவர் வெளிப்படையாக பேசுபவர்தான்.

Parliamentary Standing Committee on Personnel Public Grievances Law and Justice – 133rd Report on the Judicial process and reforms.

இந்தக் கமிட்டியில் பெரும்பான்மையானவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ, அவர்கள்தான் பார்லிமெண்ட்டரி கமிட்டியில் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் ஒருமனதாக என்ன சொல்கிறார்கள் என்றால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நியமனத்தில் சொல்கிறார்கள் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு. 3 சதவிகிதம் இருப்பவர்களுக்கு சரி; ஆனால், வட மாநிலங்களில் அவர்கள் 95 சதவிகிதம் இருக்கிறார்கள்; மத்திய பிரதேசத்தில், உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 60 நீதிபதிகள் என்றால், அதில் 55 நீதிபதிகளாக அவர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள்

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், எத்தனை செயலாளர்கள் இருக்கிறார்கள்? நிதி செயலாளர், சுகா தாரத் துறை செயலாளர், கல்வித் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் எல்லோருமே பார்ப்பனர்களா? இல்லையே!

ஆனால், ஒன்றிய தலைமை அலுவலகத்தில் பார்த் தீர்களேயானால், 90 செயலாளர்களில், 80-க்கும் மேற் பட்டோர் பார்ப்பனர்கள்.
இதுகுறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னாரே, 90 செயலாளர்களில், 3 பேர் ஓபிசி; 2 பேர் எஸ்சி, 2 பேர் எஸ்டி அவ்வளவுதான்.
உயர் பதவிகளில், கொள்கை முடிவு எடுக்கக்கூடிய இடங்களில் இதுதான் நிலை. மற்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிலைமை!

2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரை…

பார்லிமெண்ட்டரி கமிட்டியில் 2018 ஆம் ஆண்டி லிருந்து 2023 ஆம் ஆண்டுவரை 601 நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களில் உள்ள காலி இடங்களில் நிரப்பப்பட் டனர். அதில், 457 பேர் உயர்ஜாதியினர். 77 சதவிகிதம்.
18 எஸ்சி, 9 எஸ்டி, 72 ஓபிசி, 91 பெண்கள்.

பார்லிமெண்ட்டரி கமிட்டி வெளியிட்ட
புள்ளி விவரம்!

இந்தப் புள்ளிவிவரங்கள் பார்லிமெண்ட்டரி கமிட்டி சொன்னதுதான்.

Diversity Deficit

As per the page 47 of the 133rd statement released on 7th August, 2023 by the Parliament Committee for Law and Judiciary

“As per the data provided by the government on the social status of the judges of the High Courts and otherwise also, it can be seen that our higher judiciary suffers from ‘diversity deficit’. The representation of SCs, STs, OBCs, WOMEN and MINORITIES in the higher judiciary is far below the desired levels and does not reflect the social diversity of the country. In recent years there has been a declining trend in representation from all the marginalised sections of Indian society.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

பன்முகத்தன்மை தட்டுப்பாடு

சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்றக் குழு 7 ஆகஸ்ட் 2023 அன்று வெளியிட்ட 133 ஆவது அறிக்கையின் பக்கம் 47 இன்படி,
“உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சமூகத் தகுதி அடிப் படையில் அரசாங்கம் வழங்கிய தரவுகளின்படி, நமது நீதித்துறை ‘பன்முகத்தன்மை தட்டுப்பாட்டால்’ பாதிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

நீதித்துறையில் பார்ப்பனர் அல்லாதோர் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பங்களிப்பு தேவையான அளவை விட மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இது நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லை. சமீப ஆண்டுகளில் இந்திய சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது.

பார்லிமெண்ட்டரி கமிட்டி என்ன பரிந்துரை செய் திருக்கிறது என்றால்,

Thus, The Committee is of the view that while making recommendations for appointments to the Higher Judiciary, both the Supreme Court and the High Court’s Collegiums should recommend an adequate number of women and candidates from the marginalized sections of the society including minorities.

இதன் தமிழாக்கம் வருமாறு:

நீதித்துறைக்கான நியமனங்களுக்கான பரிந்துரை களைச் செய்யும்போது, உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கொலிஜியம் ஆகிய இரண்டும், சிறு பான்மையினர் உள்பட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சமுகத்தினரையும், பெண்களையும் போதுமான எண்ணிக்கையில் பரிந்துரைக்க வேண்டும் என்று குழு கருதுகிறது.

இன்னொரு தகவலில் அவர்கள் என்ன சொல் கிறார்கள் என்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இட ஒதுக்கீடு இல்லை என்று.
The recommended among the Constitution provide reservation.

13 பேர் என்ன ஜாதி என்று தெரியவில்லை என்று எங்களிடம் தகவல் இல்லை
ஒன்றிய அரசு சொல்கிறது

நாங்கள் ஒன்றிய அரசை கேட்டோம்; 2018 ஆம் ஆண்டிலிருந்துதான் இதைக் கொடுக்கிறோம். அதற்கு முன்பு அல்ல; 2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டுவரை கேட்கிறபொழுது, 13 பேர் என்ன ஜாதி என்று தெரியவில்லை, எங்களிடம் தகவல் இல்லை என்று ஒன்றிய அரசு சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபொழுது, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நியமனங்களில், நாங்கள் ஜாதியைப் பார்ப்பதில்லை; ஆகவே, ஜாதி விவரம் இல்லை என்று பார்லிமெண்ட்டரி கமிட்டி சொல்லியது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று ஏன் நாம் சொல்கிறோம்?

அதற்காகத்தான் நாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று சொல்கிறோம்.
தேவைப்பட்டால், சட்டத்தைத் திருத்துங்கள்; புள்ளி விவரங்களைக் கொடுக்கவேண்டும் அல்லவா!
நம்மூரில் ஆர்.சுப்பிரமணியம், ஜி.ஆர்.சுவாமிநாதன் என்கிற நீதிபதிகள் இருக்கிறார்களே, அவர்களின் பெயருக்குப் பின்னால், அய்யர் என்று போடுவதில்லை.
பார்லிமெண்ட்டரி கமிட்டியின் பரிந்துரை
ஆனால், வடக்கே எடுத்துக்கொண்டால், சாட்டர்ஜி, முகோபாத்யாயா, முகர்ஜி, மிஸ்ரா, சர்மா என்று ஜாதிப் பெயரைப் போடாமல் இருக்கமாட்டார்கள். ஷெல்யூல்டு காஸ்ட் சமூகத்தினரைத் தவிர.
பார்லிமெண்ட்டரி கமிட்டியின் பரிந்துரையைப் பாருங்கள்:

“Further, as of now, data related to the social status of High Court judges are available from 2018 onwards, the committee recommends the Department of Justice finds ways and means to collect such data in respect of all judges presently serving in the Supreme Court and High Courts. For doing this, if required, necessary amendments may be brought in the respective Acts/Service rules of the judges.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

தற்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சமூக தகுதி தொடர்பான தகவல்கள் 2018ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கின்றது, அதேபோல் உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் அனைத்து நீதிபதிகள் தொடர்பாகவும் சமூகத் தகுதி தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்கான வழி களையும், வழிமுறைகளையும் நீதித்துறை அறிமுகப் படுத்தவேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. தேவைப்பட்டால், நீதிபதிகளின் சமூகத்தகுதி தொடர் பான சட்டங்களில் விதிகளில் தேவையான திருத்தங் களை உயர்நீதிமன்றங்கள் கொண்டு வரவேண்டும்.
இப்படியும் சொல்கிறார்கள்; அரசமைப்புச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டபடி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment