காஞ்சிபுரம்,பிப்.28- சீரிய பகுத்தறிவாள ராக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்த, சுயமரியாதைச் சுடரொளி வெங்கடேசன் அவர்களின் வாழ் விணையரும், பகுத்தறிவாளரும் கருவூ லத்துறை அலுவலருமான வெ. லெனின் அவர்களின் தாயார் வெ.வாசுகி அம் மாள் கடந்த 6.2.2024 அன்று தம் 83 ஆம் வயதில் இயற்கை எய்தினார். அவரது உடல் எந்தவித சடங்குகளு மின்றி இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.
படத்திறப்பு
மறைந்த வாசுகி அம்மாளின் படத்திறப்பு நிகழ்ச்சி 25.2.2024 அன்று காலை 11 மணியளவில், சின்ன காஞ்சிபுரம், பட்டாளத் தெருவில், அவர்கள் இல்லத்தில் க. பச்சையப்பன் தலைமை யில் நடைபெற்றது.
வாசுகி அம்மாளின் மகள்கள் உயர் நீதிமன்ற அலுவலர் விஜயலட்சுமி, இளைய மகள் கண்மணி ஆகியோர், மகன்கள் வெ. லெனின், வெ. இராவ ணன், மருமகன் பொறியாளர் ஜெய் சங்கர், மருமகள் முனைவர் பேபி, மரு மகள் திருமதி சாந்தி, மருமகன் முனை வர் கோபிநாதன், இவர்களுடைய செல் வங்களான பொறியாளர் பாவேந்தன், லாவண்யா, கவினி, சேந்தன், கிருஷ்ணா, பாவனா லட்சுமி, சாதனா ஆகியோர் புடைசூழ வாசுகி அம்மாள் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. வெ. முரளி, கருவூல கணக்குத்துறை மாநிலத் தலைவர்
ஆ. பாலகிருஷ்ணன், பணி நிறைவெய்திய முதன்மை கல்வி அலுவலர் மா. மணி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.சுந்தரவடிவேலு, சத் துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.ஆர். திலகவதி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலக மாநில செயற்பாட்டாளர் எம்.பி. திலகம், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொறுப்பாளர் பணிநிறைவெய்திய வட் டாட்சியர் வி.தென்னரசு, பணிநிறை வெய்திய வங்கிப்பணியாளர் தவசி யைச் சேர்ந்த தேவராஜ், வருவாய்த் துறை மாவட்ட செயலாளர் செங்கல் பட்டு விக்டர் சுரேஷ்குமார், மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற மருமகன் முனைவர் கோபிநாத், பணி நிறைவெய்திய கிராம நிர்வாக அலுவலர் வை. தி. ரகுபதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் பேராசிரியர் முனைவர் காஞ்சி பா.கதிரவன், குடும்பத்தினரின் பகுத் தறிவு, முற்போக்குச் செயற்பாடுகள் குறித்தும், அனைவரும் கல்வி கற்று அரசுப் பணியில் இருப்பது குறித்தும், அனைவருக்கும் உதவி செய்கின்ற மனம் கொண்டிருக்கின்ற இயல்பு குறித் தும், படத்திறப்பின் நோக்கம் குறித்தும், காரியம், கருமாதி, திதி இவற்றால் நமக்கு ஏற்படுகின்ற மான இழப்பு குறித்தும், படத்திறப்பு ஏன் நடத்த வேண்டும்; காரியம் ஏன் செய்யக்கூடாது என்பது குறித்தும், சமஸ்கிருதத்தில் சொல்லப்படு கின்ற மந்திரங்களின் பொருள் குறித்தும், தமிழ் மொழிக்கு இழிவையும் சமஸ் கிருதத்திற்கு உயர்வையும் காட்டும் நிலை குறித்தும், தமிழர்களை இழிவு படுத்தியும் பார்ப்பனர்களை உயர்வு படுத்தியும் செய்யக்கூடிய சடங்குகள் குறித்தும், தந்தை பெரியாருடைய மனித நேய, சமத்துவ, பகுத்தறிவுக் கருத்துக்கள் குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் செயல் பாடு குறித்தும், ஆரிய பார்ப்பனர்களின் இந்துத்துவா சக்திகளின் பெண்ணடிமை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பணி நிறைவெய்திய முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜி. பாலன், வாசுகி அம்மாள் குடும்பத்துடன் தனக்கு இருந்த நெருக்கம் குறித்தும், குடும் பத்தினரின் பண்புகள் குறித்தும், மறைந்த வாசுகி அம்மையாரின் வாழ் விணையர் வெங்கடேசன் அவர்களின் எளிமை குறித்தும், லெனின் ராவணன் மட்டுமல்ல விஜயலட்சுமி கண்மணி ஆகியோரும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற தன்மைகள் குறித்தும், அனைவரும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேண்டு கோளையும் வைத்து வாசுகி அம்மாள் அவர்களை நினைவு கூர்ந்தார்.
நிறைவாக வாசுகி அம்மாள் அவர் களின் மகன் லெனின், எங்
களுக்கு சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையில்லை; நாங்கள் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள். எங்கள் குடும்பத்தினர் உறவினர்கள் என்று யாராவது செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மனித நேயம், மனித சமத்துவத்திற்கு நாங்கள் என்றும் துணை நிற்போம். எங்கள் நால்வரையும் எங்கள் பெற்றோர் அப்படித்தான் ஆளாக்கினார்கள் என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி நன்றி கூறினார்.
மூன்றாமாண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மகள் லாவண்யா, இளைய மகள் கவினி ஆகியோர் வழியாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 5000/- வழங்கினார்.
படத்திறப்பு நிகழ்ச்சி எளிமையாக வும் அறிவார்ந்த பகுத்தறிவுக் கருத்து களைப் பகிரும் கொள்கை விருந்தாக வும் அமைந்தது.
நிறைவாக அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக வந்திருந்த அனை வருக்கும் தந்தை பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள?’, ‘இனி வரும் உலகம்’ ஆகிய புத்தகங்கள் வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோவி. கோபால், காஞ்சிபுரம் மாவட்ட கழக இணை செயலாளர் ஆ. மோகன், மாவட்ட பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் இளம்பரிதி, ர. உஷா, கண்ணன், எழிலன், பொன் மகள் உள்ளிட்ட ஏராளமான உறவினர் களும் நண்பர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment