தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பி.ஜே.பி.
ஜாதி, மத கோட்பாடுதான் பி.ஜே.பி.யின் ஒரே செயல்பாடு
சி.பி.எம். தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் கண்டனம்
சென்னை, பிப்.11– “ஆட்சிப் பொறுப் பில் உள்ள பா.ஜ.க., -ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தத் துடிக்கும் ஹிந் துத்துவ பிராமணிய மநு வாதத் தத்து வமானது, ஜாதி முறையைக் காலா காலத்திற்கும் நீட்டிக்கச் செய்ய போதிப் பதாகும்.
நீண்ட நெடிய சமூக சீர்திருத்தப் போராட்டங்களால் வென்றெடுக்கப் பட்ட அத்தனை சமூக முன்னேற்றங் களையும் புரட்டிப்போட்டு சமூகத்தை முந்தைய காலங்களுக்குத் திருப்பிக் கொண்டு போகும், அவர்களது தத்து வத்தை முறியடிக்காமல் ஜாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவு கட்ட முடியாது. அதே வேளையில் வர்க்க சுரண்டலுக்கு எதிரான போரையும், ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போரையும் பிரிக் காது ஒருமித்து ஒரே காலத்தில் முன் னெடுக்க வேண்டும்” என்றார் மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்.
போராட்டக் கள அனுபவங்கள்
மிகவும் முக்கியமானவை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் எழு திய ‘ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்: கள அனுபவங்கள்’ நூலை 9.2.2024 அன்று சென்னை யில் வெளியிட்டுப் பேசிய பிரகாஷ் காரத், “இந்தப் புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டில் நிலவும் தீண்டா மையின் பல்வேறு வடிவங்கள், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான ஜாதிய வன் கொடுமைகள் இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தியுள்ள இந்தப் புத்தகம் விரைவில் ஆங்கிலத்திலும் வர வேண் டும், அப்படியே இந்திய மொழிகள் பல வற்றிலும் கொண்டு செல்லப்பட வேண் டும். ஏனெனில் நாடு நெடுகிலும் ஜாதிய ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றுக்கு எதிரான போராட் டக் கள அனுபவங்கள் இன்று மிகவும் முக்கியமானவை ஆகும்” என்றார் காரத்.
ஜாதிய ஒடுக்குமுறை குறித்த
கள நிரூபணமே இந்த நூல்
“ஜாதிய இழிவு, தீண்டாமை வன் கொடுமைகள் பற்றிச் சொல்லும் போதெல்லாம் மிகவும் அறிவார்ந்த பகுதி மக்கள் கூட, ‘இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை’ என்று அடித் துப் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், கள ஆய்வுகள் மூலம் மறுக்க முடியாத உண்மைகளின் அப்பட்டமான சாட்சி யமாக, நிரூபணமாக இந்தப் புத்தகம் அனைத்து வித ஒடுக்குமுறைகளையும் ஆவணப்படுத்தி உள்ளது” என்று பாராட் டிய காரத், “ஒடுக்குமுறைகளுக்கு எதி ரான மதிப்பு மிக்க களப் போராட் டங்களின் பதிவு இந்தப் புத்தகம்” என்றார்.
“தமிழில் உள்ளதால் புத்தகத்தைத் தன்னால் வாசிக்க இயலாது, போனா லும், அதன் சாராம்சம் ஆங்கிலத்தில் தனக்குத் தரப்பட்டது” என்று குறிப் பிட்ட காரத், கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த காலம் தொட்டு, தான் மேற்கொண்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங் களை சம்பத் விவரித்துத் தொகுத் துள்ளார், ஆலய நுழைவு மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு ஆலய நுழைவு கோரி மேற் கொள்ளப்பட்ட போராட்டங்கள் தொடங்கி தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான கொடிய வன்கொடுமைகளுக்கு எதிரான பல் வேறு போராட்டங்களையும் புத்தகம் பதிவு செய்துள்ளது” என்றார்.
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்க்கும் போராட்டத்தில் பங்கேற்கத் தானும் அங்கே போராளிகளோடு சென்றதை நினைவு கூர்ந்த காரத், “மாவட்ட நிர்வாகம் முந்தைய நாளே சுவரின் ஒரு பகுதியை இடித்து விடும் நிர்ப்பந்தத்தை நம் போராட்டங்கள் ஏற்படுத்தியது. காவல் துறையின் கடு மையான நடவடிக்கைகளையும் எதிர் கொண்டு போராட்டங்களை நடத்தி யவர் சம்பத்” என்று பாராட்டினார்.
சுரண்டல் நீடிப்பதற்கு
துணைபோகும் ஜாதியம்
“போராட்டங்களை மட்டும் சொல் லிக் கொண்டு போகவில்லை, கடைசி அத்தியாயங்களில், ஜாதிய ஒடுக்கு முறை யைத் துடைத்தெறியும் வழி என்ன, என் பதையும் விளக்கி இருக்கிறார் சம்பத்” என்று குறிப்பிட்ட காரத், “ஜாதியம் என்பது ஏதோ ஒரு நம்பிக்கை அல்லது உணர்வு என்பது அல்ல, சமூகக் கட்டு மானத்தின் பகுதி என்று மார்க்சிஸ்டுகள் தெளிவாக நம்புகிறோம். முதலாளித் துவ உற்பத்தி முறை ஏற்பட்ட பிறகும் கூட ஜாதிய ஒடுக்குமுறைகள் இல்லாது போகவில்லை, மாறாக, மலிவான முறையில் சுரண்டலைத் தொடர்வதற்கு ஜாதியம் பயன்படுத்தப்படுகிறது” என்று சுட்டிக்காட்டிய காரத், “வர்க்கச் சுரண் டலுக்கும், ஜாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் என்பது ஒன்றோ டொன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தது” என்றார்.
“ஜாதியில் கீழ்நிலையில் இருப்ப வர் கூடத் தனக்கும் கீழான படிநிலையில் இருப்பவரை ஒடுக்க நினைக்கிறார். வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட் டங்களை மட்டும் முன்னெடுத்தால், ஜாதிய முறைமை காலகாலத்திற்கும் தொடரும், அதே போல், ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருந்தால் வர்க்க சுரண்டல் இன்னும் தீவிரமாகும். இரண்டுக்கும் எதிரான போராட்டங் களை ஒரே நேரத்தில் ஒருமித்து நடத்த வேண்டும்” என்றார் அவர்.
வர்க்கச் சுரண்டலோடு வருண ஒடுக்கு முறையை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.
“மநுவாத வருணாசிரம கோட் பாட்டை உட்கொண்டு ஹிந்துத்துவ பிராமணீய ஆதிக்க உணர்வோடு ஆட் சியைச் செலுத்தும் பா.ஜ.க., -ஆர்.எஸ்.எஸ்., ‘தேச பக்தி’ என்ற போர்வையில் மத ரீதியான உணர்வைத் தூண்டி மக் களைப் பிரித்து உழைப்பாளி மக்களது உரிமைகளை ஒடுக்க முனைந்திருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் தொடக்க நிகழ்வுகளின் போது ஒரு தாழ்த்தப்பட்ட வரிடம் செங்கல் வாங்கி, ஏதோ தாங் கள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் விரும் பிகள் போல் ஓர் அடையாளப்பூர்வ வேலையைச் செய்து மக்களை ஏமாற்ற முனைந்தவர்கள் இவர்கள்.
இன்னொரு புறம் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் மக்களைப் பொருளாதார ரீதியிலும் வஞ்சித்து வருகின்றனர். எனவேதான், நாம் வர்க்க சுரண்டலுக்கும், வருணாசிரம ஜாதிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட் டங்களை ஒருமித்தும், ஒரே காலத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்கிறோம்” என்றார்.
தமிழ்நாடு போராட்டப் பாரம் பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!
“தமிழ்நாடு வரலாற்றில் நூறாண்டு களுக்கு மேலாக சமூக சீர்திருத்த வாதிகள் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆற்றிய ஏராளமான பங் களிப்பு உண்டு. ஜாதி முறைகளுக்கு எதிராகவும், ஜாதிய வன்கொடுமை களுக்கும் எதிரான மகத்தான போராட் டங்கள் நடந்தன.
திராவிட இயக்கத்திற்கு அதில் முக்கிய பாத்திரமிருந்தது. ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வலு வான போராட்டங்களை முன்னெ டுக்க வேண்டிய காலம் இது” என்றார் காரத்.
‘ஜாதிகளை ஒழித்தல்’ என்ற முக்கிய மான கருத்தாக்கத்தை டாக்டர் அம் பேத்கர் முன்னெடுத்தார், அந்த நெடிய போராட்டத்தை நடத்த, வர்க்கச் சுரண் டல், ஜாதி ஒடுக்கு முறை- இரண்டுக்கும் எதிராக ஒரு மித்த ஒரே நேரத்தில் போராட்டங்க ளை நாம் தொடர்ந்து மேற்கொள் வோம் என்றார்.
இத்தகைய போராட்டங்களுக்கும், வலதுசாரி பிற்போக்கு மதவெறி அரசியலுக்கு எதிராக மக்களிடத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சம்பத் அவர்களது புத்தகம் பெரிதும் பய னுள்ளதாக இருக்கும்” என்று பாராட்டி னார்.
No comments:
Post a Comment