குடியாத்தம், பிப். 6- தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாயொட்டி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.01.2024 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணி யளவில், குடியாத்தம் திருவள் ளுவர் மேல்நிலைப்பள்ளி கே. எம். ஜி.அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையேற் றார். கழக பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி அனைவரை யும் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் நிகழ்சியை தொகுத்து வழங்கினார்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் மருத் துவர் பழ. ஜெகன் பாபு. வேலூர் மாவட்ட காப்பாளர் வி.சட கோபன், வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ. சிவக் குமார், பொதுக்குழு உறுப்பி னர் கு. இளங்கோவன், கழக சொற்பொழிவாளர் ந.தேன் மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன் ஆற்றிய சிறப்பு ரையில்:
தந்தை பெரியார் பெண் கல்வியின் அவசியம் குறித்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, பெண்கள் சுயமரியாதையோடு வாழவும், ஜாதி மத வேறுபாடு களை அகற்ற அவர் கண்ட போராட்டங்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கிடை யில் உரையாற்றினார். இந்நிகழ் வில் வேலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உரை வீச்சு தொடுத்தனர். இப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000 இரண்டாவது பரிசாக ரூபாய் 2000 மூன்றாவது பரிசாக ரூபாய் 1000 மற்றும் கலந்துக் கொண்டு சிறப்பித்த அத்தனை மாணவர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை குடியாத்தம் நகரமன்ற தலைவர்எஸ். சவுந்தரராஜன் வழங்கி சிறப்பித்தார். இப்போட்டி யின் நடுவர்களாக கவிஞர் ஜி.என்.பாபு, புலவர் மோகன் குமார் மற்றும் பி.தனபால் ஆகி யோர்கள் செயல்பட்டனர்.
நிகழ்ச்சி அரங்கம் மற்றும் மாணவர்களுக்கு மதிய உண வும் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடியாத் தம் செயலாளர் கே.எம்.ஜி. இராஜேந்திரன் வழங்கினார், நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 மாணவர்களுக்கு நினைவுப் பரிசை தயார் செய்து நன் கொடையாக வழக்குரை ஞர்,கே.எம்.பூபதி வழங்கினார், முதல் பரிசு ரூ,3000/- குடியாத் தம் முக்குன்றம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இ.வெண்மதி, இரண் டாம் பரிசு ரூ,2000/- குடியாத் தம் நகர மன்ற உறுப்பினர் டி.பி.என்.கோவிந்தராஜ், மூன்றாம் பரிசு ரூ,1000/- மணி &பிரபு சில்க் ஹவுஸ் ஆகி யோர்கள் நன்கொடைகளாக வழங்கினார்கள்.
குடியாத்தம் நகர கழகத் தலைவர் சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.லதா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா, குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் ர.ராஜ குமாரி, கழக இளைஞரணி மோ.எழிலரசன், வி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
விழா முடிவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பற்றாளர் ப. ஜீவானந்தம் நன்றி யுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment