ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படாதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 3, 2024

ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படாதது ஏன்?

புதுடில்லி, பிப்.3- பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்ச கம் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்தது. இந்த அறிக்கை யில் நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி, பணவீக்கம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறும். இது வரும் நிதி ஆண்டிற்கான பொருளாதார திசையையும் வகுத்துக்காட்டும் முக்கிய ஆவணமாகும்.
ஆனால், இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், தேர்தல் நெருங்கி வருவதாலும் பொருளா தார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படவில்லை.
இதற்கு பதிலாக “இந்திய பொருளாதாரத்தின் 10 ஆண்டு மதிப்பீடு” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச் சியை மதிப்பீடு செய்கிறது.

மேலும், எதிர்காலத்தில் எதிர் பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பு களையும் அளிக்கிறது. அறிக்கையின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
தற்போது இது உலகின் அய்ந் தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா 7 டிரில்லியன் டாலர் பொருளா தாரமாக மாற வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சிலர் இது தேர்தல் நெருங்கி வருவதால் எடுக்கப்பட்ட முடிவு என்றும், வேறு சிலர் இது பொருளாதாரத்தின் துல்லிய மான தகவல்களை வெளியிட தாமதம் தேவை என்பதற்கான அறிகுறி என்றும் கருத்து தெரிவிக் கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், “இந்திய பொருளாதாரத்தின் 10 ஆண்டு மதிப்பீடு” அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
இந்த தகவல்கள் எதிர்காலத் தில் நாட்டின் பொருளாதார திசையை தெரிவிப்பதாக வல்லு நர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் பொரு ளாதார ஆய்வறிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானால் பிரதமர் மோடி யின் நிர்வாகம் குறித்து மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்ப தால் வேண்டுமென்றே ஒன்றிய அரசு மூடி மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
வளர்ச்சி என கூறிய பாஜக, தங்களின் 10 ஆண்டுகால ஆட்சி யில் உருவாக்கிய வளர்ச்சி என்ன? என்று மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது அது குறித்து பேசுவதையே நிறுத்திவிட்டனர் என்றும் விமர்சித்துள் ளனர்.

No comments:

Post a Comment