பிரபல சிறுநீரக இயல் மருத்துவத் துறை நிபுணரும், தமிழ் உணர்வும், சமூகநீதி உணர்வு கொண்டவரும், தந்தை பெரியார்மீது மாறாப் பற்றுக் கொண்டவருமான புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.அமரேசன் அவர்கள் (வயது 87) இன்று (8-2-2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் மறைவு மருத்துவ உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் துயருறும் மகன் டாக்டர் குமரன் அமரேசன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
8.2.2024
அவர் உடல் 101, எஸ்.பிளாக், 4 ஆவது முதன்மைச் சாலை, சென்னை அண்ணா நகர் மேற்கில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 94443 60846, 86376 92165
No comments:
Post a Comment