குன்றத்தூர், பிப். 2- குன்றத் தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரில் வரைந்த திருவள்ளுவர் படத்திற்கு நெற்றியில் விபூதி பட்டையும் குங் குமமும் படத்தின் பின்ன ணியில் காவி நிறமும் இருப்பது தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் கவனத் திற்கு வந்தவுடன் கழக துணை பொதுச் செய லாளர் வழக்குரைஞர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆலோசனை யின் பேரில் 31.-1.-2024 அன்று மதியம் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை க. தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக குன்றத் தூர் ஒன்றிய அமைப்பா ளர் கரைமாநகர் ப.கண் ணதாசன், கரைமா நகர் தே.சுரேஷ்,தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் மா.குணசேக ரன், ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி,மாங்காடு கவிக்குயில் கவிஞர் மன்ற தலைவர் தன.தமிழரசன், கொல்லஞ்சேரி சமூக செயற்பாட்டாளர் தோழர் பிரகாஷ், விடு தலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.எபிவேந்தன், பொருளாளர் பாபி என்கிற பைந்தமிழன், கி.வெங்கடேசன், ஆகி யோர் பள்ளியின் தலை மையாசிரியரை சந்தித்து திருவள்ளுவர் படம் தவ றான நோக்கத்துடன் வரைந்திருப்பதை அவர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தலைமையாசிரியர் அவர்கள் கவனமாக கேட்டு தவறான நோக் கமோ அல்லது உள்நோக் கமோ எதுவும் கொண்டு வரையவில்லை என்று கூறி உடனே உங்கள் எதி ரிலேயே மாற்ற நடவ டிக்கை எடுக்கிறேன் திரு வள்ளுவர் படத்தின் பின் னணி காவி நிறமும், நெற் றிக் குறியீடும் அகற்றப்பட் டது. உடனடியாக நடவ டிக்கை மேற்கொண்ட தலைமையாசிரியருக்கு நன்றி கூறினர்.
Friday, February 2, 2024
திருவள்ளுவர் சிலை-மதச்சாயம் பூசுவதா? கழகப் பொறுப்பாளர்கள் உடனடி நடவடிக்கைக்கு வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment