கொக்கூர், பிப். 1- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக விவ சாய அணிச் செயலாளர்
கு.இளஞ்செழியனின் வாழ்விணை யரும் தமிழ்மாறன், தமிழ்நிலா ஆகியோரின் தாயாருமான சாந்தி கடந்த 15.1.2024 அன்று இயற்கையெய் தியதை முன்னிட்டு குத்தாலம் வட்டம் கொக்கூர் கிராமத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் 30-.1.-2024 அன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக காப்பாளர் ச. முருகையன் தலைமை வகித் தார். அவர் தனது தலைமை உரையில் 1957ஆம் ஆண்டில் தந்தை பெரியார் கொக்கூர் கிராமத்திற்கு வருகை தந்ததை யும், பலத்த எதிர்ப்புகளுக்கி டையே அதனை அனைவரும் பாராட்டும்படி இளஞ்செழிய னின் தந்தையார் குஞ்சிதபாதம் முன்னின்று நடத்தியதையும், தாமும் இளைஞராக அதில் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்து உணர்ச்சி மிக்க உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர். இராசா, மற்றும் தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும் தொழி லதிபருமான ஏ.ஆர். ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மத நிகழ்வு களில் பார்ப்பனர்கள் நம்மை இழிவு படுத்தி புரியாத மொழி யில் கூறும் மந்திரங்களை எடுத்துச் சொல்லி கூடியிருந்த பெண்கள் நடுவே ஆற்றிய உரை எழுச்சியூட்டக் கூடிய தாக இருந்தது.
மாவட்ட கழக செயலாளர் கி. தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் கழக மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளு வன், மாவட்ட துணைச் செய லாளர் அரங்க. நாகரத்தினம், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி. முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி. வி. இளங்கோவன், நகர செயலாளர் பூ.சி. காமராஜ், ஒன்றிய செயலாளர் அ. சாமி துரை, நகர துணைத் தலைவர் சி.அறிவுடைநம்பி, குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு. இளமா றன், கொக்கூர் கழகத் தோழர் கள் துரைராஜன், ராஜமாணிக் கம், உத்திராபதி, பாலசுந்தரம், என்.குணசேகரன், கலைக் குமார், பிரபாகரன், திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் உத்திராபதி, உதயகுமார், சின்னகுமார், முருகன், காசி ராஜன், ராஜசேகர், பாண்டி யன், மோகன், எம்.என். ரவிச் சந்திரன், மதியழகன், மில்லர், வரதராஜன் மற்றும் இளஞ்செழியனின் குடும்ப உறுப்பி னர்கள் ஊர் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment