பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
(நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) பெரியார் கலைவிழா
வல்லம், பிப்..18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை ழா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவர் வி.சுமையா வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.இராமச்சந்திரன் தலைமையுரையில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் வர லாற்று சிறப்புமிக்க மாவட்ட மாக நமது தஞ்சாவூர் சிறந்து விளங்குகிறது என்றும் மேலும் மாணவர்கள் தங்களுடைய ஆளுமைத் திறமைகளை வெளிக் கொணர்வதற்காக நடத்தப்படும் கலைவிழாவாகும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பல் கலைக்கழக பதிவாளர் பேராசிரி யர் பிகே.சிறீவித்யா உரையாற் றும் போது: மாணவர்கள் படிப் பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாக பெரியார் விழா இருக்கின்றது என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த் துகளை கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்வி வளர் மணி விருதுபெற்ற மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜி.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது சமத்துவ வாழ்க்கைதான் வாழ்க்கை என்றும் தந்தை பெரியாரை பற்றிய பாடல்களை பாடி பெருமைபடுத்தினார். அக் காலத்தில் உள்ள வாழ்க்கை முறைக்கும் மற்றும் இக்கால வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாட்டினை பாடல்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன.
இறுதியாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் எஸ்.மணிஸ் குமார் நன்றியுரையாற்றினார். இதனையடுத்து கலைநிகழ்ச்சி நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment