சென்னை, பிப்.28- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்கள் 2024-2025ஆம் கல்வி யாண்டுக்கான பிபிஏ. பி.எம்.எஸ், பி.சி.ஏ படிப்புகளுக்கு ஏஅய்சிடிஇ அனுமதி பெறுவதற்கான விண் ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
ஏஅய்சிடிஇ அனுமதி பெற்றால் மட்மே ஏஅய்சிடிஇ பலன்களை பெற முடியும்.
தற்போது, நாடு முழு வதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பக் கால அவகாசத்தை நீட் டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள் ளன.
இதை ஏற்று பி.பி.ஏ. பி.சி.ஏ.பி.எம்.எஸ் படிப்பு அனுமதிக்கான விண் ணப்ப பதிவிற்கு வருகிற மார்ச் 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங் கப்படுகிறது.
இந்த வாய்ப்பை கல் லூரிகள் பயன்படுத்திக் கொண்டு,www.aicte.india.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப் பிக்கலாம். -இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Wednesday, February 28, 2024
பி.பி.ஏ., பி.சி.ஏ., படிக்க விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment