இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மக்களை தேடி மருத்துவ முகாம்

featured image

புழல், பிப்.4 புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில். மக்களை தேடி மருத்துவ முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
புழல் காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாம் வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நேற்று (3.2.2024) நடைபெற்றது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை, இருதயம் உள்ளிட்ட பல்வேறு நோய் களுக்கு மருத்துவர்களால், இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ‘‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் 200 பேருக்கு பாஸ்போர்ட் போட்டு தரப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் வசிப்பவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அறிய மூன்று வகையிலான பிரிவுகளாக செயல்பட்டு கணக் கெடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

No comments:

Post a Comment