திருச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
பயிற்சியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களின் கருத்து
திருச்சி,பிப்.19- திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியா ரியல் பயிற்சிப்பட்டறை 18.2.2024 ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணிக்கு திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்விற்கு மாவட்ட தி.க. தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையேற்று உரையாற்றினார் .
இளைஞர்ணிசெயலாளர் சு.மகா மணி வரவேற்புரையாற்றினார்.
“பெல்” ஆறுமுகம், மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் மலர் மன்னன், மாவட்டம் மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மணப் பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன், திருவெறும்பூர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், மாவட்ட ப.க. தலைவர் மதிவாணன் பெல்.அசோக் ராஜ், மாநகரத் தலைவர் துரைசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்தி, லால்குடி வீ.அன்பு ராஜா, ஆசிரியை செல்வி ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி அறிமுக உரை யாற்றினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் தொடக்க உரை யாற்றினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்ட றையின் முக்கியத்துவத்தை விளக்கியும் பயிற்சி பட்டறையை சிறப்பாக ஏற்பாடு செய்த கழகப் பொறுப்பாளர்களை யும், பங்கேற்ற மாணவர்களையும் பாராட்டி உரையாற்றினார்.
வகுப்புகளும் தலைப்புகளும்
“தந்தை பெரியார் ஒரு அறிமுகம் ” என்ற தலைப்பில் மா.அழகிரிசாமி கருத்துகளை வழங்கினார்.
பார்ப்பன பண்பாட்டு படையெடுப் புகள் என்ற தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வகுப்பபெடுத்தார். தமிழர் வாழ்வில் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளை, வழி பாட்டு முறையில் ஏற்பட்ட மாற்றங் களை பெயர் கூட தமிழில் வைக்க முடியாத நிலையை விளக்கிக் கூறினார்.
“தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி. வில்வம், ஆசிரியர் வீரமணி அவர்கள் இளமைக் காலந் தொட்டு இன்று வரை தந்தைப் பெரியாரின் கொள்கைகளை பரப்பிடும் முறைகள் பற்றியும், சமூக நீதிக்கான களத்தில் அவர் ஆற்றி வரும் அரும் பணிகள் குறித்தும் அரிய கருத்துகளை எடுத்துக் கூறினார்.
“சமூக நீதி வரலாறு “என்ற தலைப்பில் கிராமப் பிரச்சாரமாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அய்யங் களை தெளிவுபடுத்தினார்.
தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சி யால் போராட்டத்தால் இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டின் தோற்றம் மற்றும் அதன் தொடர்ச்சி இன்றைய தினம் இட ஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
“மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை திண்டுக்கல் ஈட்டி கணேசன் சிறப்பாக செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
“இந்து இந்துத்துவா ஆர்எஸ்எஸ்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் இந்துத்வா ஆட்சியதிகாரத்தில் எவ்வாறு ஊடுருவியிருக்கிறது என்ப தையும், இந்துமதம் என்பது எப்படி உருவானது? இந்துத்வா எப்படி ஆபத் தானது என்பதை விளக்கியும் கருத் துகளை தெரிவித்தார்.
“தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பில் துணைப்பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னா ரெஸ் பெரியார் சமத்துவத் திற்காக போராடிய பெரியார் பெண் களின் சமத்துவத்திற்காக பெரிதும் சிந்தித்த தலைவர். பெண்களின் உரிமை களுக்காகவும் மனித சமத்துவத் திற்காகவும் பெரியார் சிந்தித்து கொள் கைகளை வகுத்தார்.
பேரறிஞர் அண்ணா தொடங்கி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வரை செயல்படுத்துகிறார்கள் என்றார்.
காணொலி வாயிலாக தமிழர் தலைவர்
தந்தை பெரியாரின் சிறப்புகளையும் செல்வக்குடும்பத்தில் பிறந்த தந்தை பெரியார் பதவிக்காக அரசியலுக்கு வரும் இந்த காலத்தில் பதவிகளை துறந்து விட்டு பொது வாழ்க்கைக்கு வந்தவர் அய்யா தந்தைப் பெரியார் என்றும், 95 ஆண்டு காலம் வரை தமிழ் சமூகத்திற்காக உடல் நலம் குன்றிய போதும் உழைத்த தலைவர் பெரியாரின் தியாகத்தையும் விளக்கி காணொலியில் சிறப்பாக உரையாற்றினார்.
மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் தலைவரின் உரையை கவனித்தனர்.
கேள்வியும் பதிலும்
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பதில் அளித்து அய்யத்தை தெளிவு படுத்தினார்.
மாணவர்களின் கருத்து
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் அதன் பயன் குறித்து தங் களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
பரிசும் பாராட்டும்
பயிற்சி வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுத்த மறவனூர் பா.கீர்த்திகா, திருவரங்கம் செ.ப.முகி லன், திண்டுக்கல் கே.சந்தியா, மணப் பாறை ஜோதிகா, திருச்சி பிரித்திவி ராஜன் ஆகியோர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது திருவரம்பூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் தமிழ்சுடர் புத்தகங்களை அன்பளிப் பாக வழங்கினார் . பயிற்சி பட்டறையில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ் புத்த கங்களை பரிசாக வழங்கினார்.
பயிற்சி பட்டறையில் 84 மாணவர் கள் பங்கேற்றனர் ஆண்கள் 54 பெண் கள் 30 பள்ளி மாணவர்கள் 48 கல்லூரி மாணவர்கள் 22.
ரூ 9010க்கு நூல்களை மாணவர்கள் ஆர்வமுடன் கழிவு விலையில் வாங்கி னர். பல்கலைக்கழக மாணவரணி மாநில அமைப்பாளர் கா.அறிவுச்சுடர் அனை வருக்கும் நன்றி கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறை 43 வது பயிற்சி பட்டறையாகும்.
No comments:
Post a Comment