அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று (3-2-2024) ‘‘எங்கள் அண்ணா, என்றும் வாழ்கின்றார், வாழ்வார்!” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
இன்று (3-2-2024) அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாள்!
நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் –
எங்கள் ஆட்சி!
தந்தை பெரியாரின் தலைமகன், திராவிடர் அரசி யலை, கொள்கையை முன்வைத்து புத்துரு செய்த வகையில், 56 ஆண்டுகளுக்குமுன்பு புதுமையான ஆட்சியை அமைத்து – அந்த வெற்றியைக்கூட – அவருக்கே உரிய தன்னடக்கத்தோடு, ‘‘இந்த வெற்றி எனது சாதனையல்ல; என் பாட்டன் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சிதான். எனவே, எங்கள் ஆட்சி இந்த மக்களின் மீட்சி” என்று கூறியவர்.
தன்னை உருவாக்கி, வளர்த்த தனது அறிவு ஆசானுக்கே தனது ஆட் சியை காணிக்கையாக பிர கடனப்படுத்திய பெம்மான் நம் பேரறிஞர் அண்ணா!
முப்பெரும் சாதனைகளை செய்து
வரலாறு படைத்தார்!
அந்த காணிக்கை வெறும் சடங்கல்ல; சம்பிர தாயம் அல்ல; மாறாக, கொள்கை, லட்சியபூர்வமானது என்பதை நிரூபிக்கும் வண்ணம் –
மாற்றப்பட முடியாததான முப்பெரும் சாதனை களைச் செய்து வரலாறு படைத்தவர் நம் அண்ணா!
அதை முன்னோக்கிய தந்தை பெரியார், அண்ணா மறைந்த நேரத்தில் விடுத்த இரங்கல் செய்தியில்கூட,
‘‘அண்ணா மறைந்தார்,
அண்ணா வாழ்க!” என்ற இரண்டு வரிகளில் வரலாற்றைச் சுருக்கினார்!
அறிஞர் அண்ணாவின் முப்பெரும் சட்டப் புரட்சி, சமூக வெற்றிகளுக்கான அடிக்கட்டுமானங்களாயின – எளிதில் எவராலும் அசைக்க முடியாதபடி!
1. சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி சட்ட வடிவம் – சரித்திர சாதனை!
2. சென்னை ராஜ்ஜியம் – தமிழ்நாடு ஆன தன்னி கரற்ற சாதனை!
3. தமிழ், ஆங்கிலம் மட்டுமே தமிழ்நாட்டில் ஆட்சி மொழி என்ற தகத்தகாய பண்பாடு – புரட்சிச் சாதனை!
இப்படி!
அந்த வழியில், அவரது ஆளுமைமிக்க அருமைத் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக்காலத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் தகுதி சட்டத்தை இயற்றினார்!
புதியதோர் அரசியல் படைத்தார் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!
அதன் தொடர்ச்சியாக அந்த சமூகப் புரட்சிக்கு முழு செயல்வடிவம் தந்து, கருவறை பேதம் ‘‘தனது சவப்பெட்டியில் தானே ஆணி அடித்துக் கொள்ளும்படி” செய்து, அரியதோர் ஒப்பற்ற சாதனை செய்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்களை, சமூகநீதி நாளாக, சமத்துவ நாளாக பிரகடனப்படுத்தி புதியதோர் அரசியல் படைத்தார் நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எங்கள் பகைவர் எங்கோ ஒளிந்து –
ஒப்பாரி அரசியல் செய்கின்றனர்!
அண்ணா வாழுகிறார், வாழுகிறார், வாழுகிறார்!
என்றும் வாழ்வார்!
வாழ்க அண்ணா!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3-2-2024
No comments:
Post a Comment