புதுதில்லி, பிப். 6- பொருளாதாரத்தில் நெருக்கடி கொடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கருநாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, தலைநகர் டில்லி யில் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் அலட்சியத்தை கண்டித்து வரும் 7ஆம் தேதி டில்லி யில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடத் தப்படும். ஒன்றிய அரசின் கொள் கைகளைக் கண்டித்து டில்லியில் கேரளா நடத்தும் போராட்டத்திற்கு காங்கிரஸின் கேரள தலைமை முகம் சுளிக்கும் நேரத்தில் கருநாட காவில் உள்ள காங்கிரஸ் அரசு போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளது. ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் கருநாடகாவுக்கு எதுவும் இல்லை என்றும், வறட்சி நிவாரணம் கூட நான்கு மாதங்களாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருவதால் கருநாடகாவின் கடன் சுமை அதிகரித்து வருவதாக துணை முதல மைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
அய்ந்தாண்டுகளாக ஒவ் வொரு ஒன்றிய நிதி நிலை அறிக் கையில் கருநாடகாவுக்கான ஒதுக் கீட்டில் ரூ.7,000 கோடி முதல் 10,000 கோடி வரை குறைக்கப் பட்டுள்ளது. 15ஆவது நிதி ஆணையம் மாநிலத்திற்கான வரி விகிதத்தை 3.64 சதவிகிதமாகக் குறைத்தது. இதன் மூலம் 62,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளதாக சிவக்குமார் கூறி னார். டில்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி ஒன்றிய அர சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் துணை முதலமைச்சர் கூறினார்.
தொடரும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
கேரளத்தை புறக்கணிப்பது மற்றும் துரோகத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி டில்லியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இரண்டு வாரங் களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. கேரளத்தின் போராட்டத்தை ஒன் றிணைந்து நடத்த எதிர்க்கட்சி தலைமைக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார், ஆனால் மாநில காங்கிரஸ் தலைமை அதற் குத் தயாராகஇல்லை. மாநில அரசு களை நசுக்கும் ஒன்றிய அரசையும், பாஜகவையும் கண்டித்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா தலைமையில் டில்லியில் போராட் டம் நடத்தப்போவதாக திரிணா முல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள் ளது. வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கொல்கத் தாவில் 2 நாள் மறியல் போராட் டமும் நடத்தினார் மம்தா.
No comments:
Post a Comment