பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் அவதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் அவதி

featured image

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் அவதி
60 ஆயிரம் காவலர் பணியிடத்துக்கு 48 லட்சம் பேர் விண்ணப்பமாம்

லக்னோ,பிப்.19- 2014-ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கை யில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரது கடந்த 10 ஆண்டு கால ஆட்சிக் காலத் தில் மொத்தமாக 2 கோடி பேருக்கு கூட ஒன்றிய அரசு வேலை வழங்

கவில்லை. வேலை கேட்டால், பகோடா விற்று பிழைக்கச் சொல்கிறார் மோடி. இதனால் நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் படுமோச மாக உள்ள நிலையில், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தில் 60,000 வெறும் காவலர் பணிக் கான தேர்வுக்கு 48 லட்சம் பேர் குவிந்த அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச காவல்துறை யில் காவலர் பணிக்கான தேர் வுக்கான எழுத்து தேர்வு பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத் தில் வேலையில்லா திண்டாட் டம் படுமோசமாக உள்ளதால், கான்ஸ்டபிள் தேர்வுக்கு இது வரை இல்லாத வகையில், 48 லட் சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து இருந்தனர். 48 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்த உத்தரப்பிரதேச பாஜக அர சிடம் போதிய வசதிகள் இல்லாததால்தான், தேர்வை பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்தது.
முதல் கட்ட தேர்வு சனியன்று (17.2.2024)நடைபெற்ற நிலை யில், தேர்வில் கலந்து கொள்ள வெள்ளியன்று நள்ளிரவு முதலே உத்தரப்பிரதேச மாநில ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தேர்வாளர்கள் குவிந்தனர். இத னால் திருவிழா காலங்களை போன்று மாநிலத்தின் அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலை யங்களும் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கியது.
முக்கியமாக நாட்டின் மிகப் பெரிய ரயில் நிலையங்களில் ஒன் றான கான்பூர் ரயில் நிலையத்தில் மெக்காவின் “ஹஜ்” யாத்திரை யில் காணப்படும் அளவிற்கு நெரிசல் இருந்தது. அதாவது தேர்வாளர்கள் மட்டுமே ரயில் பயணம் மேற்கொண்டார்கள். மற்ற பயணிகள் காலை வரை காத் திருந்து பயணம் மேற் கொண்டனர்.

மோடி அரசின் மோசமான பொருளாதார கொள்கையால் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந் துள்ள இந்த நிகழ்வு நாடு முழு வதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அர சியல் மற்றும் அனைத்துத் தரப் பினரும் மோடி அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின் றனர்.

No comments:

Post a Comment