அரசு துறை பணியிடங்களில் எஸ்.சி. எஸ்.டி. குறைவு பணியிடங்களை கணக்கிட தனி குழு தலைமை செயலாளர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

அரசு துறை பணியிடங்களில் எஸ்.சி. எஸ்.டி. குறைவு பணியிடங்களை கணக்கிட தனி குழு தலைமை செயலாளர் அறிவிப்பு

சென்னை, பிப்.18 அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு: அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதன்படி, அரசுத் துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்களின் எண்ணிக்கை உறுதி செய்வதற்காக அரசுத் துறை உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவராக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலர் க.லட்சுமி பிரியா செயல்படுவார். சட்டத் துறை இணைச் செயலர் ப.அன்புச் சோழன், மனிதவள மேலாண்மைத் துறை இணைச் செயலர்பி.ஆர்.கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழு குறைவுப் பணியிடங்களை துறைகள் வாரியாக ஆய்வு செய்து, பிப்.28-ஆம் தேதிக்குள் தலைமைச் செயலருக்கு அறிக்கை அளிக்கும். இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் பிப்.19 முதல் 27-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் மாலையில் நடைபெறும். நாளொன்றுக்கு 5 அரசுத் துறை களைச் சேர்ந்த செயலர்கள் அல்லது துறைத் தலை வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்துக்கான பொருள், கூட்டம் நடைபெறும் தேதி ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment