இப்படியோர் மூடநம்பிக்கையா? சாலையோரத்தில் கல்லை நட்டு கடவுள் என்பதா? உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

இப்படியோர் மூடநம்பிக்கையா? சாலையோரத்தில் கல்லை நட்டு கடவுள் என்பதா? உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

featured image

சென்னை,பிப்.7-சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சாமி சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப் பட்டுள்ள கல்லை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக, புகார் அளித்தபோது, இது உரிமையியல் பிரச்சினை என காவல்துறையினர் புகாரை முடித்துவிட்டதாக மனுவில் தெரிவித்தி ருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த ஒளிப் படங்களை ஆய்வு செய்த பிறகு, “மனுதாரருக்குச் சொந்தமான சொத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கல்லை ஒரு பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைக்க ஒருவரால் முயற்சி செய்யப்படுகிறது. சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக் கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.
சாலையில் நடப்பட்ட கல், சிலையா… இல்லையா என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இதற்காக இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்.

இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது, மிகவும் வாய்ப்புக் கேடானது. மேலும் காலத்திற்கேற்றபடி சமூகமும் மக்களும் மாறவில்லை என்பதையே இது காட்டு கிறது” எனக் கூறி, மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment