நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா?
கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்
கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
சென்னை,பிப்.7- கேரள முதல மைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப் பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய் துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த விஷ யத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயா ராக உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்தாலும், கடந்த சில ஆண் டுகளில் நிலைமை வேகமாக மோச மடைந்துள்ளது என்றும், மாநி லங்களின் நிதி நிர்வாகத்தில் இத் தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களி டையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களின் பொதுச் செல வினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப் பட்ட அதிகார வரம்பிற்கு உட் பட்டது.
இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்பு களைக் கட்டுப்படுத்த, இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 293ஆவது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகா ரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவு, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதி களின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய் யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளதாக வும், இதன் விளைவாக அரச மைப்புச் சட்டத்தை உருவாக் கியவர்கள் கருதிய நிதிக் கூட் டாட்சியின் அடிப்படைக்கே மாபெ ரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், ஒன்றிய அரசின் இத் தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின் னடைவை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்களுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024ஆம் ஆண் டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது என்றும், இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறி முறைகளின்படி, மாநில மின் வினி யோக நிறுவனங்களின் மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது என்றும், இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள் ளது என்றும், எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப் புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்றாவதாக, ஒன்றிய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணி களுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஜி.எஸ்.டி. அம லாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான அரச மைப்புச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய கால கட்டத்தை ஒப்பிடுகையில், ஆண் டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை தமிழ் நாடு அரசு எதிர்கொண்டு வரு கிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலங்களின் கொள்கை முன் னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும். முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி யளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருமித்த கருத்துடைய முற் போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிதிக் கூட்டாட்சித் தத்துவத் தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது என்றும், இந்த முக்கிய மான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைக ளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சி களையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment