காரைக்குடி, பிப். 4 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் “பெரியார் பேருரையாளர்” புலவர் இராமநாதனார் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் தமி ழாகரர் தெ.முருகசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் செ.நாகநாதன் அனைவ ரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளரும் நிறுவனர் இராம. பெரியகருப்பன் அவர்களின் மகனுமான பெரி.வீரப்பன் மகிழ்வுரை வழங்கிட அறக்கட்டளையை தொடங்கியும் புலவர் இராமநாதன் அவர்களின் உருவப் படத்தினை யும் திறந்து வைத்து ” நாம் தனி மனிதர்கள் இல்லை” எனும் தலைப்பில் திரா விட இயக்கத் தமிழர் பேரவை தலைவரும், தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவருமான பேரா.சுப.வீரபாண்டியன் சிறப் புரை நிகழ்த்தினார். புல வர் இராமநாதனார் பெயரில் அறக்கட்டளையினை உருவாக்கிய கல் லூரியின் மேனாள் மாண வர்கள் உ.தேவதாசு, பி.சின் னையா, சி. மாதவன், இராம. அருச்சுணன், ப.கண்ணன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர். முடிவில் பேராசிரியை கீதா நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, கழக சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, சாக்கோட்டை ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் மு.அன்பரசு, எழுத்தாளர் ந.குமரன் தாசு, பொறி யாளர் சா.நடராசன், பேரா.கு.ராஜ்குமார் மற் றும் மேனாள் பேராசிரி யர்கள் மாணவ, மாணவி யர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment