அரூர், பிப். 22– தருமபுரி மாவட்டம், அரூர் கம்பைநல்லூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் அரூரில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப் போது ஒரு பாத்திரத்தில் அவர் மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். அந் தப் பேருந் தில் நடத்துநராகப் பணியாற்றிய அரூர் சின்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு(54) என்பவர், மாட்டு இறைச்சி எடுத்துச் சென்றதை காரணம் காட்டி, மோப்பிரிப் பட்டி பகுதியில் பேருந்தில் இருந்து நடுவழி யில் அவரை இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.
பேருந்தை வழிமறித்து…
பின்னர், வேறு பேருந்து மூலம் பாஞ்சாலை வீட்டுக்கு சென்றுள்ளார். நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து மீண்டும் அன்று இரவு அரூர் நோக்கி வந்தபோது, பாஞ்சாலையின் குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் சிலர் நவலை கிராமம் அருகே பேருந்தை வழிமறித்து மறியல் செய்தனர். ஆனால், நடத்துநரும் ஓட்டு நரும் மரியா தைக் குறைவாக பதில் அளித்த தோடு மட்டுமல்லாமல் போராடியவர் களை கொச்சையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணைநடத்தினர். தொடர்ந்து, அரசுப் பேருந்து நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வட இந்தியாவில் மட்டுமே மாட்டிறைச்சி வைத்திருந்தால் அடித்துக் கொலை செய்தல், வீடுகளை இடிப்பது, பெண்களை மானபங்கப்படுத்தி சித்ரவதை செய்வது போன்ற அராஜகப் போக்கு நடந்துவந்தது. இந்த நிலையில் தமிழ்நாட் டிலும் இந்தக் கலாச்சாரம் பரவத்துவங்கி உள்ளது “சமுக ஒற்றுமையைச் சிதைக்கும் இது போன்ற அராஜகப் போக்கை துறை உயரதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மதவெறி இங்கும் வளர்ந்து ஒற்றுமையைச் சிதைத்துவிடும்” என்று சமுக ஆர்வலர்கள் கருத்து கூறுகின் றனர்.
No comments:
Post a Comment