இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்?

செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இரண்டு முறை வந்துவிட்டார்; இப் பொழுது மூன்றாவது முறையாக வரவிருக்கிறார்; அவருடைய வருகை தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; பா.ஜ.க.விற்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்கிறார்கள்; தமிழ்நாட்டிற்குப் பிரதமருடைய தொடர் வருகையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஒவ்வொருமுறையும் தமிழ் நாட்டிற்கு பிரதமர் மோடி வரும்பொழுது, பல ஆயி ரக்கணக்கான வாக்குகளை தமிழ்நாட்டில் அவர் இழக்கிறார்.
ஒவ்வொருமுறையும்அண்ணாமலைபோன்ற வர்கள் பேசும்பொழுது, அதை அதிகப்படுத்து கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
அதற்கு என்ன காரணம் என்றால், ஒரு மனித நேயம்கூட பிரதமரிடம் இல்லை. இராமேசுவரத் திற்குப் போய் ஒரு நாள் முழுவதும் கண்களை மூடிக்கொண்டிருக்கும் மோடி, பக்கத்திலிருக்கும் தூத்துக்குடி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் அவதி இன்னும் தீரவில்லை – அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை!
37 ஆயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டிருக்கிறது. ஒன்றிய அரசு நிவாரண நிதியாக இதுவரையில் 37 ரூபாயைகூட அளிக்கவில்லை.

No comments:

Post a Comment