பத்திரப்பதிவு முடிந்தவுடன்இணையதளத்தில் எவ்விதக் கட்டணமுமின்றி வில்லங்கச் சான்று! அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

பத்திரப்பதிவு முடிந்தவுடன்இணையதளத்தில் எவ்விதக் கட்டணமுமின்றி வில்லங்கச் சான்று! அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

featured image

சென்னை, பிப்.21- சென்னை, பெரிய மேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில் லங்கச் சான்று விவரங்களை Tiny URL மூலம் ஆவணதாரருக்கு அனுப்பும் வசதியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தற்போது பத்திரப் பதிவு முடி வடைந்தவுடன் பொதுமக்கள் பதிவுத் துறையின் இணையதளத்தில் சென்று எந்தவிதமான கட்டணமுமின்றி வில்லங்க சான்று விவரங்களை தரவிறக்கம் செய்யும் வசதி நடை முறையில் உள்ளது.
இணையதளத்தில் சென்று வில்லங் கச்சான்று விவரங் களை பார்வையிடும் வசதியை மேலும் எளிதாக்கும் வண் ணம், ஒரு பத்திரப்பதிவு நிறை வடைந்த மறுநாள் சொத்து உரிமையாளரின் அலை பேசிக்கு ஆவணத்தைப் பொறுத்த தற்போதைய வில்லங்கச் சான்று விவரங்களை எவ்வித கட்டண முமின்றி Tiny URL ஆக குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பிவைக்கும் நடை முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், பத்திரப் பதிவு நிறைவடைந்த மறுநாள், Tiny URL உடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த Tiny URL யை கிளிக் செய்த பின்னர் ஆவணத்தைப் பொறுத்த வில்லங்கச் சான்றினை PDF வடிவில் அலைபேசியிலேயே தர விறக்கம் செய்து சேமித்துக்கொள்ளலாம்.
இவ்வாறான வில்லங்கங் சான்று விவரங்கள் முப்பது நாட்கள் வரையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
இத்தகவலை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment