அரசு முறையில் ஸ்பெயின் நாட்டுக்குத் தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம்!
ரூ.3,440 கோடி முதலீடுகள் ஈர்ப்பு – அடுத்தடுத்து
பல நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ளும்!
சென்னை, பிப்.7 வெளிநாட்டுப் பய ணத்தை வெற்றிகரமாக முடித்து ரூ.3,440 கோடி தொழில் ஒப்பந்தங்களுடன் திரும் பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.2.2024) காலை சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:
உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ் நாட்டுக்குப் பல்வேறு முதலீடு களை ஈர்த்து விட்டுத் திரும்பி இருக் கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந் திருக்கிறது.
ஸ்பெயினில் முதலீடு ஈர்ப்பதற்கான கூட்டம்!
தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப் பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சென் றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந் தது. அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக் கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள்.
· ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள்
· ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப் பாளர்கள்
· இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன்.
தமிழ்நாட்டில், தொழில் தொடங்கு வதற்கு இருக்கக் கூடிய உகந்த சூழல் பற்றி அங்கே எடுத்துச் சொல்லி, நம் முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாள்களில் ஸ்பெயின் நாட்டில் செயல்படுகின்ற முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித் தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்த நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங் களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறு சுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சி யானா நிறுவனம்
2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட் களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட் கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம்
3. கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம்
4. பன்னாட்டுத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக் கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம்
5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவ னமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம்
6. இரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ நிறுவனம்
7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறி யியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவி களை உற்பத்தி செய்கின்ற எடிபான் நிறுவனம்
8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனம்
– ஆகிய நிறுவனங்களின் நிர் வாகிகளை எல்லாம் நான் சந்தித்தேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களை விளக்கியும், தமிழ் நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.
ரூ.3,440 கோடி முதலீடுகள்!
இந்த முயற்சிகளின் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முத லீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. ஹபக் லாய்டு நிறுவனம் – 2500 கோடி ரூபாய் முதலீடு.
2. எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு.
3. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதி யளித்திருக்கிறது.
இந்த நிறுவனங்கள் மட்டுமில் லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத் தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
தமிழ்நாட்டைப் புகழும்
‘நியூயார்க் டைம்ஸ்’
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச் சியையும், தமிழ்நாட்டின் பொரு ளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.
உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படு கின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வரு வதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற் கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப் படுத்தி செயல்பட வைக்கிறது.
தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘பார்த்தேன் – படித்தேன் – ரசித்தேன்!”
கேள்வி: தற்போது நீங்கள் வெளி நாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்ப தற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?
முதலமைச்சர்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கி றேன். நாடாளுமன்றத் தேர்தல் இப் போது நெருங்கி வருவதால், அதற் குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.
கேள்வி : நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித் திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த் தீர்களா?
முதலமைச்சர்: பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க் கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங் கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க் கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங் கிரஸ் இருப்பது போல ணீttணீநீளீ செய்வது போலவும் பேசிக் கொண் டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
400 இடங்களா,
மீதி இடங்கள்?
கேள்வி: பிரதமர் பேசும்போது 400 இடங் களை நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்று வோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து.
முதலமைச்சர்: மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.
கேள்வி : நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்.
முதலமைச்சர்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி, வணக்கம்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment