மதுரை, பிப். 3- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பிரதமர் மோடி ஜனவரி 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து ஒரு செங்கலை பூஜை செய்து வைத்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக இதனைக் கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ஒரு செங்கல் மட்டுமே தற்போது வரை அங்கே உள்ளது
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டரை ஆண்டுகள் கழித்துதான், கடன் ஒப்பந்தம் மார்ச் 2021இல் செய்யப் பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட வில்லை இந்த நிலையில் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மக்களை ஏமாற்றவாவது சொற்பத்தொகை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்குவார்கள் என்று இருந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு, அறிவிக்காதது தமிழ்நாடு மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment