திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, ஆண்டு விழா
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு
திருச்சி, பிப். 9 திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டு விழா நேற்று (8.2.2024) மாலை 5 மணியளவில், கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பெரியார் கல்விக்குழுமங்களின் செய லாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் பாக்கிய லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விருது
50ஆம் ஆண்டு பொன்விழாவில் மேனாள் தலைமை ஆசிரியர்கள் க.திலகவதி, மா.ராசாத்தி, இரா.விஜய லட்சுமி ஆகியோருக்கு அமைச் சர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். முன்னதாக இப் பள்ளி யின் முதல் மாணவியும், நாகம்மையார் குழந்தைகள் இல்லக் காப்பாள ருமான ஆர்.தங்காத்தாள்- அவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி பாராட்டினார். மேலும் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 10, மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியை ஈட்டி தந்த அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. 10, 12 ஆம் வகுப்பு சிறப்பிடம் பெற்ற மாணவி ஆயிஷா ரிஸ்வானுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
இவ்விழாவில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. ராமச்சந்திரன், பதிவாளர் டாக்டர் சிறீவித்யா, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.வனிதா, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் கீதா, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ், திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணித் தோழர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment