வட மாநிலங்களில் EVM க்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 31.01.2024 அன்று டில்லி ஜந்தர் மந்தரில் EVM அய் தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை EVM -இல் நடத்த முடியாது என்ற அளவுக்கு மக்களின் கோபம் வெளிப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் EVM எதிர்ப்பு போராட்டம் பரவிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் EVM -இல் Technical -ஆக (தொழில்நுட்ப ரீதியில்) முறைகேடு செய்ய முடியும் என்று மேனாள் தலைமை தேர்தல் ஆணையாளர் S.Y. குரேஷி கருத்து தெரிவித்துள்ளார். இதே போல மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் தொழில் நுட்ப ஆலோசகராக இருந்த விஞ்ஞானி பொன்ராஜ் EVM – இல் முறைகேடு செய்ய 100% வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு தரப்பினரும் EVM க்கு எதிராக பேச வேண்டிய சூழ்நிலையை மக்களின் எதிர்ப்பு உருவாக்கியுள்ளது.
மென்பொருளை பயன்படுத்தி EVM இல் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்பதை விளக்கி மதுரையை சேர்ந்த மென்பொறியாளர் கண்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் EVM மாதிரியை கொண்டு செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
இதே போல சென்ற மாதம் டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டத்தில் பவன் குமார் ஷர்மா என்பவர்EVM-VVPAT மாதிரியை பயன்படுத்தி EVM -இல் மட்டுமல்லVPAT ஒப்புகை சீட்டுகளிலும் முறைகேடு செய்ய முடியும் என்பதை செய்து காட்டியுள்ளார். ஓட்டு போடும் போது 7 விநாடிகள் மட்டும் VPAT – எந்திரத்தில் வாக்களித்த சின்னம் நமக்கு காட்டப் படும். ஆனால் ஒப்புகை சீட்டில் வேறு சின்னம் பிரிண்ட் ஆகும் படி முறைகேடு செய்ய முடியும் என்பதை விளக்கியுள்ளார். இந்த ஹிந்தி காணொளியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.தொடர்ந்து மக்களிடம் இந்த காட்சிப் பதிவு வைரலாக பரவுகிறது. (https://youtu.be/lWNm1raqn6A)
EVM-க்கு எதிராக இவ்வளவு மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன. தேர்தல் அதிகாரி, விஞ்ஞானி, பொறியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் EVM-ல் மோசடி செய்ய முடியும் என ஆதாரப்பூர்வமாக கருத்துகளை தெரிவிக்கின்றனர். இருந்தும் கூட எதிர்கட்சிகள் EVM அய் தடை செய்யக் கோரி போராட்டங்களை நடத்த மறுப்பது ஏன்?
முகநூலிலிருந்து…
….
குரேஷி, பொன்ராஜ், கண்ணன், பவன் குமார் ஆகியோர் சொல்வதை போல் EVM இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை அனைவரும் செய்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக https://banevm.in/என்ற இணைய தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்துக்கு சென்று நீங்களே வாக்களித்து எப்படியெல்லாம் EVM- இல் முறைகேடு நடக்கிறது என்பதை உணர முடியும்.
இது பற்றிய காட்சிப் பதிவு – https://m.facebook.com/story.php?story_fbid=1812048759308919&id=100015114364035 &mibextid=Nif5oz
#BanEVM_SaveDemocracy
#Ban_EVM
#BanEvmSaveIndia
#ModiAfraidOfBallotPaper
#BanEVM
சபாஷ்
இது தான் மதவெறி பாஜக வின் லட்சணம் பாருங்கள்….! “மதவெறி பாஜக” மோடி யின் “டிஜிட்டல் இந்தியா திட்டம்” இது தானோ…?!
No comments:
Post a Comment