ஜோதிடருக்கே ஜோதிடம் தெரியாதா? தேனியில் ஜோதிடர் குத்திக் கொலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

ஜோதிடருக்கே ஜோதிடம் தெரியாதா? தேனியில் ஜோதிடர் குத்திக் கொலை!

தேனி, பிப். 19- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதா னப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மன்மதன் (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தேவதானபட்டி பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, மற்றும் வட் டிக்குப் பணம் கொடுக் கும் தொழில் செய்து வருகிறார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள நல்ல கருப்பன் பட்டியை சேர்ந்த ஜெய தீபா (வயது 40) என்ற பெண் தேவதானப்பட்டி பகுதியில் இயங்கி வரும் எல்அய்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணி யாற்றி வருகிறார்.
ஜெய தீபா மன்மத னிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், பெற்ற கடனை திருப்பிக் கேட்டு பல முறை தொந் தரவு செய்ததாக கூறப் படும் நிலையில், ஜெய தீபா மற்றும் அவரது காதலனான தேவதானப் பட்டி தெற்குத் தெரு வைச் சேர்ந்த முத்துமணி (வயது 30) இருவரும் சேர்ந்து நேற்று (18.2.2024) பிற்பகலில் வீட்டில் தனி யாக இருந்த மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவர் கழுத் தில் அணிந்திருந்த 5 சவ ரன் நகையை திருடி சென்று பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்ததுள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மன்மதனின் தாய் நேற் றிரவு 9 மணி அளவில் தனது மகனின் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு தேவ தானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப் படையில், காவல்துறையினர் மன்மதனின் உடலை மீட்டு உடற்கூராய் விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டனர்.
இதனைத் தொடர்ந்து கொலை யான மன்மதனின் வீட்டின் தெருப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்த பொழுது, சந்தேகிக்கும் படியாக வந்த ஜெய தீபா மற்றும் அவரது கள்ளக் காதலன் முத்துமணியை விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து மன் மதனை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாகவும், மேலும் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென் றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரை யும் தேவதானப்பட்டி காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய் துள்ளார்.
மேலும் இக்கொலைச் சம்பவம் தேவதானப் பட்டி காவல் நிலையத் தின் எதிரே உள்ள தெரு வில் பட்டப் பகலில் நடை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment