வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
மதுரை, பிப்.26 சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை ஆட்சி மொழி யாக்க ஒன்றிய அரசும் உச்சநீதிமன்ற மும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் மாநில சிறப்பு மாநாடு மதுரை உலக தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயல் தலைவர்- தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் ஏ. கோதண்டம் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு:- ஜனநாயகத்தில் அரசு நிர்வாகப் பணிகளும், நீதிமன்ற நடை முறைகளும் மக்களின் மொழியில் இருக்க வேண்டும். மக்களின் மொழியில் நீதி பரிபாலனம் நடக்கும் போது தான் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் இன்னும் சரியான புரிதலோடு மக்களுக்குப் போய்ச் சேரும். அதுவே உண்மையான ஜன நாயகமாக இருக்கும். உயர்நீதி மன்றகளில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத் தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கீழமை நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்றன.
ஆனால் உயர்நீதி மன்றங்கள் வரை அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக் கப்படும் போதே ஜனநாயகத்தின் மீது மக்க ளுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்ப டுத்த முடியும். இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இன் படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழி யாக இந்தி அல்லது சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகா ரம் அளிக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்மதத்தைப் பெற்று அமல்படுத்த வேண்டுமென 1965-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அப்போதைய அமைச்சரவையின் முடிவு இன்று வரை நீடிப்பது,
ஹிந்தி பேசாத மாநிலங்களில்
தமிழ் மொழி அலுவல் மொழியா வதற்கு தடையாக இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2)-இன் படி இராஜஸ்தான், அலகாபாத், மத்தியப்பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்கா டும் மொழியாக ஹிந்தி அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக் கப்பட வேண்டுமென்ற கோரிக் கையை அமலாக்காமல் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் பாகு பாட்டுடன் செயல்பட்டு வரு கின்றன.
அந்தந்த மாநில மொழி களில் உயர்நீதிமன்றம் செயல் படுவதற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. போதிய நிதி ஒதுக்குவதன் மூலம் தான் மக்களின் நீண்ட கால கோரிக்கை சாத்தியமாகும். இந்த கோரிக்கை அந்தந்த மாநிலங்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது என்பதை புரிந்து கொண்டு நடை முறை சிக்கல்களை காரணமாகக் கூறா மல் ஒன்றிய அரசும் உச்ச நீதி மன்றமும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருநாடகா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் நீண்ட காலமாகவே அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தங்கள் தாய்மொழியை அலுவல் மொழி யாக்க வேண்டுமென கோரி வரு கின்றன. தமிழை வழக்காடு மொழி யாகவும், அலுவல் மொழியாகவும் கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கை வழக்குரைஞர்கள், வழக் காடிகள், நீதிபதிகளின் கோரிக்கை மட்டுமல்ல. இது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை யாகும். இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசும் உச்சநீதிமன்றமும் உடனடியாக அமல்படுத்த நட வடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் ஆர். சவுரிராமன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment