வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி வெற்றிப் பயணத்துடன் நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் ஸ்பெயின் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி வெற்றிப் பயணத்துடன் நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்

featured image

சென்னை,பிப்.6- வெளிநாடுக ளில் வாழும் தமிழர்களின் தேவை களை நிறைவேற்ற தயாராக உள் ளோம். நீங்களும் பிறந்த மண் ணான தமிழ்நாட்டுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஸ்பெயினில் உள்ள தமிழர் கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் முத லீடுகளை ஈர்ப்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட் டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், ‘ஸ்பெயின் தமி ழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 4.2.2024 அன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதா வது:
தமிழ்நாட்டில் இருக்கி றோமா, வெளிநாட்டில் இருக்கி றோமா என்று சந்தேகம் ஏற்பட் டுள்ளது. ஸ்பெயினுக்கு இப்போ துதான் வருகிறேன். ஆனால், பல முறை வந்ததுபோன்ற உணர்வை தரும் வரவேற்பை நீங்கள் அளித் துள்ளீர்கள். உங்கள் தாய் மண் ணான தமிழ்நாட்டுக்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்கிறீர்கள்; செய்யப் போகிறீர் கள்; செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் தமி ழர்களுக்கு துணைநிற்க வேண்டும் என்ற அடிப்படையில், மேனாள் முதலமைச்சர் கலைஞர் ஓர் அமைப்பை உருவாக்கினார். சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக் கப்பட்டு. அந்த அமைப்பு செயல்ப டாமல் போய்விட்டது.
இப்போது மீண்டும் நமது ஆட்சி உருவாகி இருக்கிறது. கலைஞர் செய்ய நினைத்ததை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். சமீபத்தில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை சென்னைக்கு வர வழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கி றோம். உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கு மட்டுமல்ல; இந்தி யாவைக் கடந்து, வாழ்ந்து கொண் டிருக்கும் உங்களுக்கும் பெருமை தான்.
பல்வேறு நாடுகளுக்கு சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது பாசமும்,நேசமும் அன்பும் கொண்டு ஒவ்வொருவரும் அளித்த உபசரிப்பு நெகிழ வைத்து இருக் கிறது. உங்கள் அனைவருக்கும் என் னுடைய அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு முதலமைச்சர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முதலமைச்சரின் செயலர் உமா நாத், ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத் தார். பிறகு நடைபெற்ற சந்திப்பு களின்போது, பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாலை கட்டமைப்பு மேம் பாட்டு நிறுவனமான அபர்ட்டி ஸின் பன்னாட்டு மற்றும் நிறு வனத் தொடர்பு தலைமை அதி காரி லாரா பெர்ஜானோ, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற் கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.
ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா நிறு வனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவ னங்களுடன் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப் பந்தம் மேற்கொள்ள உள்ளன.
ஸ்பெயின் பயணத்தை முடித் துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7.2.2024) காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment