சென்னை, பிப்.1-சென்னையில் வணிக எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (1.2.2024) இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர் தலை முன்னிட்டு எரிவாயு உருளை விலை குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று (1.2.2024) அதி காலையிலேயே வணிக எரிவாயு உருளை விலை அதிகரிக்கப்பட் டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் எரிவாயு உருளை விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பிப்ரவரி 1ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற் பனையாகி வந்த எரிவாயு உருளை, இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து வணிக எரி வாயு உருளையின் விலை அதி கரித்து வருவதால், உணவகங்களில் உண வுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது வெளியூர்களில் தங்கி உண வகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமை யாய் கருதப்படுகிறது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை யின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
No comments:
Post a Comment