சென்னை, பிப்.18 வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல் களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இன் சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கை கோள், ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப் பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன் சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ நிறு வனம் வடிவமைத்தது.
இதை விண்ணில் செலுத்து வதற்கான 27.30 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று முன்தினம் (16.2.2024) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் சிறீகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மய்யத்தின்2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் நேற்று (17.2.2024) மாலை 5.35 மணிக்கு திட்டமிட்டபடி இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப் பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 18நிமிடங்களில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 253 கிமீ தொலை வில் உள்ள புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது.
No comments:
Post a Comment