‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு

featured image

தமிழ்நாட்டுக்குரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதா?
மக்களவையில் தி.மு.க. உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு!
டி.ஆர்.பாலு – ஆ.இராசா உரை வீச்சு!

புதுடில்லி, பிப். 7- தமிழ்நாட்டிற்குரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ‘‘இந்தியா’’ கூட்டணிக் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. நிவாரண நிதியை வழங்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கொறடா ஆ.இராசா ஆகியோர் ஆவேசமாகப் பேசினர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம் பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது வானிலை ஆய்வு மய்யம் உரிய முன்னெச்சரிக்கை தர வில்லை என்று குற்றம் சாட்டினார். இதனால் ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்ட தாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பின்போது வானிலை மய்யத்தின் கணிப்புகள் முற்றிலுமாக தோல்வி யடைந்தன. சென்னை வானிலை ஆய்வு மய்யம் மேம்படுத்தப்படாததால் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கவில்லை. சென்னை வானிலை ஆய்வு மய்யத்தில் நவீன உபகரணங்கள் இல்லை. உரிய முன்னெச்சரிக்கை இல்லாததால் ஆயிரக் கணக்கான பயணிகள் ரயிலில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

டி.ஆர்.பாலு கண்டனம்!

டி.ஆர்.பாலு எம்.பி. பேசிக் கொண்டி ருக்கும்போது ஒன்றிய அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசியதற்கு டி.ஆர்.பாலு எம்.பி. கண்டனம் தெரிவித்தார். டி.ஆர்.பாலு எம்.பி. பேசிக் கொண்டி ருக்கும்போது, ஒன்றிய இணையமைச் சர்கள் நித்யானந்த் ராய், எல்.முருகன் ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அதற்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவை யில் அமளி ஏற்பட்டது. ஆனால் வெள்ள நிவாரணம் தொடர்பாக ஒன்றிய அரசு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
வெள்ள நிவாரண நிதி குறித்து பதிலளிக்காததால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் வெளி நடப்பு செய்தது. தமிழ்நாட்டிற்கு உரிய வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததை கண்டித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளி நடப்புசெய்தனர்.

கருஞ்சட்டை அணிந்து போராட்டம்!

தேசிய பேரிடர் மேலாண்மை நிதி யிலிருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார். டில்லியில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசை கண்டித்து நாளை (8ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன், கருஞ்சட்டைஅணிந்து போராட் டம் நடத்தப்படும் என்றும் ‘இந்தியா’ கூட்டணியை கண்டு பா.ஜ.க. பயந்துள்ளது என்றும் கூறினார்.

குற்றச்சாட்டு

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க. கொறடா ஆ.இராசாஎம்.பி., தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமரை சந்தித்து 37ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டபோதும், ஒன்றிய அரசு ஒரு பைசாகூட வழங்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டி னார். தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்திய போதும், இதுவரை வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய ஆ.இராசா, தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாடு அரசு ரூ.37 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் கோரியது. தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டு அனைத் துக் கட்சிக் குழு உள்துறை அமைச்சரை சந்தித்தது. ஆனால் தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,000கோடி வெள்ள நிவாரணம் எப்போது வழங்கப்படும், எவ்வளவுத் தொகை வழங்கப்படும் என அமைச்சரின் பதிலில் உறுதி அளிக்க வில்லை. ஒன்றிய அரசின் குழு தமிழ்நாட் டில்மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசும் அறிக்கை அளித்துள்ளது. இரண்டு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் உள்ளது. உள்துறை அமைச்சர் அளித்த உத்தரவாதத்தின்படி, வெள்ள நிவாரணத் தொகை எப்போது விடுவிக்கப்படும்? அந்த வெள்ள நிவா ரணத் தொகை பா.ஜ.க. ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு வழங்கியது போல இருக்குமா?
மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு என்பதை சுட்டிக்காட்டிய ஆ.இராசா எம்.பி. மாநில பேரிடர் மேலாண்மை நிதியை வெள்ள நிவாரண நிதி என்று கூறுவது ஏமாற்றும்செயல் என்று குற்றஞ்சாட்டி னார். குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பாரபட்சம்காட்டுகிறது என்றும் ஆ.இராசா கடுமையாக விமர்சித்தார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக வழங்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநி லங்களில் ஒன்றிய அரசின் செயல்பாடு மாற்றாந்தாய் மனப்பான்மையில் உள் ளது. மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதிஎன்பது வேறு. இரண்டையும் ஒன்றிய அமைச்சர் குழப்பிக் கொள்கிறார்.15ஆவது நிதி ஆணை யத்தின் கீழ், ஆண்டுதோறும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் பேரிடர் மேலாண்மைநிதியை வெள்ள நிவாரண நிதியாக கூறுவது ஏற்புடையதல்ல என ஆ.இராசா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment