மும்பை, பிப். 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “சுயமரியாதைச் சுடரொளி” சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவேந் தல் படத்திறப்பு 18.2.2024 மாலை 7- மணிக்கு தாராவி கலைஞர் மாளி கையில் நடைபெற்றது
கடவுள் மறுப்பு கூறி மும்பை திரா விடர் கழக செயலாளர் இ.அந்தோணி அனைவரையும் வரவேற்றார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார், மும்பை பகுத்தறி வாளர் கழக தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினார்,
அறிவுக்கரசு அவர்களின் படத்தை திராவிடவியல் மறுமலர்ச்சி மய்யத்தின் தலைவர் முனைவர் ஜோ.இரவிக்குமார் ஸ்டீபன் திறந்து வைத்து இரங்கலு ரையாற்றினார்.
தொடர்ந்து மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் பதிலை பிரதாபன், மும்பை புறநகர் இலக்கிய அணிபொறுப்பாளர் வ. இரா.தமிழ் நேசன், மனித நேய இயக்கத்தை சேர்ந்த சங்கர் திராவிடர், மும்பை தி.மு.க அவைத்தலைவர் வே.ம. உத்தமன், மகிழ்ச்சி மகளிர் இயக்கப் பொறுப்பாளர் சு.வெண்ணிலா ஆகி யோர் உரைக்குப்பின் இறுதியாக லெமூ ரியா அறக்கட்டளை தலைவரும், தமிழ் இலெமூரியா திங்களிதழ் ஆசிரியருமான சு.குமணராசன் இரங்கலுரை நிகழ்த் தினார்.
முலுண்ட் அ.பாலசுப்பிரமணியம், எல். ஜெகநாதன், தந்தை பெரியார் அம்பேத்கர் சமூகநீதி பேரவை தலை வர் பி. கே.இராசேந்திரன், சவுத் நல அறக்கட்டளை தலைவர் முருகன் அபிமன்யு, ப.பொன்னுத்துரை, பூ .சு. அழகர் ராஜா, எம் .அலி முகமது, தமிழர் நட்புப் பேரவை பொதுச்செ யலாளர் த. செ.குமார், மும்பை கழக தோழர்கள் பெரியார் பாலா, அய்.செல்வராசு, தொல். காமராசு, மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன், ஜெய் பீம் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்குமார், மும்பை திமுக இளை ஞரணி பொறுப்பாளர் உ.அமரன், த.நெல்லையா குமார், ஸ்டீபன் ஜெப ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மும்பை திக பொருளாளர் அ.கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment