பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு : கல்வித்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு : கல்வித்துறை தகவல்

சென்னை,பிப்.23- தமிழ்நாடு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். அர சுப்பள்ளி மட்டுமின்றி உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாண வர்கள் சேர்க்கை எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார், ரேஷன் உள்ளிட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், அர சுப் பள்ளிகளில் படிக்கும் மாண வர்கள் பலருக்கு ஆதார் எண் இல்லை. அரசு திட்டங்கள், உயர் கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட வைகளுக்கு ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (23.2.2024) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. இது தொடர்பாக, சென்னை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய் தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை நாளை முதல் பள்ளிகளில் மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் குமர குருபரன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,” பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப் பிப்பை எல்காட்டின் அங்கீகரிக்கப் பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, இதனால் நிரந்தர சேர்க்கை மையத்திற்கு பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் உங்கள் மாவட்டத்திலும் இதைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட் டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப் பாய்வு செய்ய வேண்டும். ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட் ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment