மயிலாடுதுறை, பிப். 7- மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை, மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர்களை பெரு மைப்படுத்தும் வகையில் மண்ணின் மைந்தன் என்ற பெயரில் தனி அரங்கு ஒதுக்கப்பட்டு 60 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் தினந் தோறும் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு மேடை யில் சிறப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் 6ஆம் தேதி நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை இராஜேந்திரன், ஆகி யோருக்கு பாராட்டுதெரிவித்தார். அவர்கள் சார்பில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதி ராஜ், வழக்குரைஞர் நா.இளைய ராஜா ஆகியோர் நினைவுப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உடல் பேசும் மொழி என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றிய மருத்துவர் கு.சிவராமன் பல்வேறு உடல் நலக் குறிப்புகளை எடுத்துரைத்தார். அவர் தனது உரையின் நிறைவில், “நான் ஒரு முறை திருநெல்வேலியில் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே அவருடைய நண்பர் குடும் பத்தோடு வந்திருந்தார். அவரு டைய மனைவிக்கு என்னைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் என்னைப் பார்த்ததும் சார் நீங்க தானே அந்த கம்பு சோளம்? என்றார். பக்கத்தில் அவருடைய பையனும் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு என்னை தெரியவில்லை. அவன் உலகத்தில் நான் இல்லை. அவன் என்னைப் பார்த்துவிட்டு செல் போனை நோண்டிக் கொண்டிருந் தான். அவங்க அம்மா பையனை தட்டித் தட்டி,”டேய்! இவர் தான்டா தினைப்பொங்கல், குதிரை வாலி பத்தியெல்லாம் சொன்னார்” என்று என்னைக் காட்டிக் காட்டி சொன்னார். அந்த பையன் என்னைப்பார்த்து முறைத்துவிட்டு திரும்ப பார்த் தான். ஏதோ சம்பவம் நடக்கப் போகுது என என் மனதில் பட்டது.
அவன் என்னைப்பார்த்து அங்கிள் நீங்கதான் இந்த அழுக்குத் தோசை அழுக்கு இட்லியெல்லாம் சொன் னதா? எங்க வீட்டு இட்லி தோசை யெல்லாம் அழுக்காக்குனது நீங்க தானா? என்று கேட்டான். அவன் கருப்புக் கலர் தோசைன்னாலே அழுக்குன்னு நினைச்சுட்டான். நம்முடைய சமூகத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனை என் னன்னா கருப்பை அழுக்கென்றும் வெள்ளையை சிறப்பென்றும் சொல்லிக் கொடுத்ததுதான். கருப்புதான் சிறப்பு. இங்கே நிறைய பேர் கருப்புச் சட்டை அணிந்திருக் கிறார்கள். வெள்ளையிடம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” என்று பலத்த கைதட் டலுக்கு இடையே குறிப்பிட்டார்.
5 ஆம் தேதி இரவு புத்தக அரங் குகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், ‘மண்ணின் மைந்தன்’ அரங்கில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ‘தங்கத்தாத்தா வாழ்க்கையிலே!’ புத்தகங்கள் இரண்டை வாங்கி அருகில் நின்றுகொண்டிருந்த சிறு வர்களுக்கு அன்பளித்தார். அத்து டன் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் எழுதிய ‘வரலாற்றில் இவர்கள்!’ நூலினை பெற்றுச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், துணைச்செயலாளர் தி.சபாபதி, மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரெ.செல்லதுரை, செய லாளர் தங்க.செல்வராஜ், விவசா யத் தொழிலாளரணி செயலாளர் இளஞ்செழியன் மற்றும் கழகத் தோழர்கள், மகளிரணியினர், அரசு ஊழியர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment