சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உலகத் தாய்மொழி நாளில் (21.2.2024) சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உறுதிமொழியை வாசிக்க, அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனை வரும் எழுந்து நின்று உறுதிமொழி கூறி உறுதியேற்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளப்பதிவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட் டுள்ளதாவது,
அனைத்து வேறுபாடுகளையும் அறுத் தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்!
“தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப் பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?”
எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.
பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவு களில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!
அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத் தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, February 21, 2024
உலகத் தாய்மொழி நாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதியேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment